திரை துறையை சேர்ந்த பிரபலங்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர், அந்த வகையில் நடிகர் ராகவலாரன்ஸ் பல ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து வருகிறார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடி வரும் குழந்தைகள் மருத்துவ செலவை ஏற்று எத்தனையோ குழந்தைகள் உயிரை காப்பாற்றி வருகிறார், தன் வாழ்க்கையை சேவை செய்யவே அர்பணித்துள்ளார் ராகவ லாரன்ஸ் என்றால் அது மிகையாகது.
இதே போன்று அறக்கட்டளை என்கிற பெயரில் ஏழை மாணவர்களில் படிப்பு செலவை ஏற்று அவர்களுக்கு உதவி செய்து வரும் பல சினிமா துறையினரின் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் முழு பணமும் அவர்களுடைய சொந்த பணம் கிடையாது, அவர்களின் அறக்கட்டளைக்கு பல தொழில் அதிபர்கள் பொது மக்கள் என பலர் ஸ்பான்சர் செய்து வரும் பணத்தில் உதவி செய்து வருகிறார்கள்.
சில நடிகர்கள் அப்படி மற்றவர்கள் பணத்தில் தங்கள் அறக்கட்டளை மூலம் செய்யும் உதவிகள், அல்லது கோடிகளில் சம்பளம் வாங்கிட்டு சில லட்சங்கள் உதவி செய்வதை வைத்து, அவர்கள் புதிய படங்கள் எப்போதெல்லாம் வெளிவர இருக்கிறதோ அப்போதெல்லாம், தாங்கள் பெரிய சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி, புதிய படத்துக்கு விளம்பரம் தேடி கொள்வார்கள்.
இந்நிலையில் இது போன்று தாங்கள் செய்யும் உதவிகளை மேடை போட்டு தம்பட்டம் அடிக்கும் சினிமா துறையினர் மத்தியில், சத்தமில்லாமல் சொந்த பணத்தில் பல உதவிகளை செய்து வருகின்றவர் ராகவ லாரன்ஸ்.கொடைக்கானலில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட லாரன்ஸ், அந்த நடித்த படத்தில் சுமார் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் அனைவருக்கும் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை வாங்கி கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ.
மேலும் கொடைக்கானலில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் அந்தப் பகுதியைச் சார்ந்த மேரி என்கின்ற ஒரு வயதான பாட்டிக்கு கண் பார்வை இல்லை என்பதை புரிந்து கொண்ட ராகவா லாரன்ஸ். அந்த பாட்டிக்கு சிகிச்சைக்கான பணத்தையும் கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் கொடைக்கானலில் தாண்டிக்குடி என்கின்ற ஒரு கிராமத்தில்தான் லாரன்ஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது.
அந்த கிராமத்தில் சுமார் 40 வீடுகள் மட்டுமே உள்ளன. அனைத்தும் குடிசை வீடுகளாக இருக்கின்றது.ஒரு அடர்ந்த காடு பகுதி க்குள் இந்த கிராமம் இருக்கின்றது. இந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து ராகவ லவரன்ஸிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், இந்த குடிசை வீட்டிற்குள் மழை பெய்தால் குடியிருக்க முடியவில்லை. மேலும் அதிகப்படியான குளிர் ஏற்படும் பொழுது குடியிருப்பது மிக சிரமமாக இருக்கிறது.
எங்களுக்கு ஒரு சமுதாயக்கூடம் இங்கே கட்டி கொடுத்தால் அனைவரும் அந்த சமுதாயக்கூடத்தில் மழைக்காலத்தில் மேலும் குளிர் அதிகமாக உள்ள காலத்தில் தங்கிக் கொள்வோம் என்று அந்த கிராம மக்கள் ராகவா லாரன்ஸ் இடம் உதவி கேட்டுள்ளனர். உடனே செய்து தருவதாக உறுதியளித்த ராகவ லவ்ரன்ஸ், அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இந்த நிலையில் பல வருடங்களாக இங்கே நாங்கள் குடியிருக்கிறோம் அரசாங்கமே எங்களை கண்டுகொள்ளாத நிலையில் கடவுள் போல் வந்து எங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள ராகவா லாரன்ஸ் ஒரு கடவுளாகவே பார்க்கின்றோம் என்கின்றனர் அந்த கிராம மக்கள். இந்நிலையில் இப்படி பல உதவிகளை சத்தமே இல்லாமல் செய்து வரும் ராகவ லாரன்ஸ் தற்போது தெரிவிக்கையில், ஒன்றில் கடவுளின் அருளால் இப்போது வருடத்திற்கு மூன்று படங்கள் கிடைக்கிறது.
இந்த வருமானத்தின் மூலம் என்னுடைய டிரஸ்டில் உள்ள குழந்தைகளின் முழு செலவையும் தன்னால் பார்த்துக் கொள்ள இயலுகிறது. அதனால் என்னுடைய டிரஸ்டுக்கு மற்றவர்கள் யாரும் பணம் அனுப்ப வேண்டாம். உங்களது வீட்டில் அருகிலேயே உதவி இல்லாமல் பலர் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலும் என் மூலமாகத் தான் நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நான் சிலரை கைகாட்டி விடுகிறேன். நேரடியாகவே நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோடி கோடியாக சம்பளம் வாங்கி கொண்டு, நான் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறேன் அதனால் எனக்கு தான் அந்த பட்டம் என அடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தன்னுடைய சொந்த பணத்திலே அணைத்து உதவிகளையும் ட்ரஸ்ட் மூலம் லாரன்ஸ் செய்ய முன் வந்துள்ளது, கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு ஒரு படமாக அமையுமா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது.