கோடி கோடியா அள்ளி கொடுத்த நடிகர் பாலாவுக்கு இந்த நிலைமை… கொஞ்சமாவது கையில் பணம் வைத்து கொள்ள கூடாதா.?

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிக்கு அளவே கிடையாது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார்.

இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஏழை சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார். தற்போது கூட மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்.

மழை வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு தனது வங்கி சேமிப்பில் இருந்து தலா ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஏறக்குறைய 200 குடும்பங்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் என இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இரண்டு லட்சம் ரூபாயோடு பாலா நிறுத்திவிடவில்லை சில தினங்கள் பிறகு வேறொரு பகுதியில் 200 குடும்பங்களுக்குத் தலா ஆயிரம் ரூபாயும், நிவாரணப் பொருட்களும் வழங்கினார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருந்தார். பாலா விளம்பர போதைக்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றும் அவருக்குப் பின்னால் அரசியல் தலைவர் யாரோ ஒருவர் இருந்து கொண்டு அவருக்கு பணத்தை கொடுக்கிறார் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், அடுத்தவர் காசை வைத்து தான் ஒருபோதும் தானம் செய்வதில்லை என்றும் அனைத்துமே தனது சொந்தக் காசு தான் என்றும் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்தால் தன்னால் முடியாத நேரத்தில் மக்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் மிக்ஜாம் புயலில் சென்னை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வந்த மக்களுக்கு தன்னிடம் சேமிப்பு தொகையாக இருந்த 5 லட்ச ரூபாயை கொடுத்து விட்டேன். தற்போது தென் மாவட்டங்களிலும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள் ஒவ்வொரு தேவைகளில் உள்ளனர். ஆனால் கையில் இருந்த பணம் அனைத்தையும் சென்னை மக்களுக்காக கொடுத்து விட்டேன். எனவே மீண்டும் உழைத்து கிடைக்கும் காசை இங்கு உள்ளவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் திரட்டிய நிவாரணத் தொகையை பாலாவிடம் கொடுத்து நிலையில் அவர் அதனை வாங்க மறுத்து தான் தனது பணத்தில் இருந்து உதவ தான் விரும்புவதாகவும் இந்த பணத்தைநீங்களே நேரடியாக மக்களுக்கு கொடுங்கள் என தெரிவித்தது பாராட்டைப் பெற்றுள்ளது.

மக்களுக்கு ஆட்சியாளர்கள் தான் உதவ வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. நல்ல மனம் கொண்ட யார் வேண்டுமானாலும் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் உதவி செய்ய வேண்டும் என்கிற நல்ல குணத்தை பலரும் கேபிஒய் பாலாவிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஆனால், அவருக்கு ஏதாவது நிதி நெருக்கடி, வாய்ப்புகளே இல்லாமல் போகும் சூழல் உருவாகும் போது அள்ளி அள்ளி கொடுத்த பாலாவுக்கா இந்த நிலை என பலரும் வேதனை அடைந்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..