நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னிய சமூகத்தை இழிவு செய்யும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளதாக பெரும் சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு வன்னிய சங்கங்கள் மற்றும் பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் நடிகர் சூர்யா புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி அந்த சமூகத்தினர் நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நடிகர் சூர்யாவை தாக்கினால் பரிசு வழங்கப்படும் என வன்னிய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டனர், இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகன் அனலரசு நான்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் நடிகர் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது. ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக கூடினால் என்ன நடக்கும் தெரியுமா.?
என நடிகர் சூர்யாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார் அனலரசு. இந்த விவகாரம் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் நெருக்கடியை கொடுத்த நிலையில், இது தொடர்பாக மன்னிப்பு கேட்பார் சூர்யா என தகவல் வெளியானது, ஆனால், தனக்கு எதிராக எத்தனை மிரட்டல் வந்தாலும், தன் பக்கம் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் சிறிய வருத்தம் கூட தெரிவிக்காமல்,அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் படத்தில் கவனத்தை செலுத்தினார்.
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் வன்னிய சமூகம் பெருபான்மையாக இருக்கும் இடங்களில் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல திரையரங்குகளில் படம் வெளியாக வில்லை, வெளியிட்ட திரையரங்குகள் படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கியது, இதனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரும் நஷ்டம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள பாண்டவர் அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர். நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியான போது பாமக போன்ற சில அமைப்புகள் எதிர்ப்பு விடுத்தனர்.மேலும் தொடர்ந்து நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதற்கு நடிகர் சங்கம் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க போறீங்க என கேள்வி எழுப்பினார்.
இதற்கு நடிகர் கார்த்திக், இது ஒரு பொதுவான பிரச்சனை, ஒரு திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. அந்த படத்திற்கு அமைப்பு ரீதியாக ஒரு பிரச்சனை வருகின்றது என்றால், நிச்சயமாக நடிகர் சங்கம் கூட நிற்க வேண்டும். சட்டபூர்வமாக எந்த மாதிரியா உதவி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நாங்கள் உதவி செய்வோம். என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளது, ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் விவகாரத்தில் அண்ணன் சூர்யாவை மிரட்டி பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் அமைத்துள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.