சந்தானத்தை உடனே மாற்றுங்கள்..வேண்டவே வேண்டாம்… கார்த்திக் – சந்தானம் என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் மகன் கார்த்திக், முதல் படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் கார்த்திக் கதநாயகனாக அறிமுகமாவதற்கு முன்பு இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார், முதலில் நடிகர் கார்த்திக் இயக்குனராக ஆசைப்பட்டு தான் சினிமாவுக்கு வந்துள்ளார், ஆனால் பருத்திவீரன் படத்தின் வெற்றி அவரை முன்னனி நடிகர் வரிசையில் அமர வைத்தது.

பருத்தி வீரன் படத்துக்கு பின்பு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்தார் கார்த்திக், இந்த படம் சராசரியான படமாக அமைந்தது. இதன் பின்பு இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்த சிறுத்தை படம் மிக பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. இந்த படத்தில் நடிகர் சந்தனம் காமெடி காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டது, சிறுத்தை படத்தில் இணைந்த கார்த்திக்- சந்தானம் கூட்டணி அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது.

அடுத்தடுத்து சகுனி, அலெஸ் பாண்டியன் போன்ற படங்களில் கார்த்திக் – சந்தானம் கூட்டணியில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றிக்கு சந்தானம் காமெடி முக்கிய காரணம் என பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கார்த்திக் – சந்தானம் கூட்டணியில் உருவான படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா, இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருந்தார்.

இயல்பாகவே சந்தானம் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை படப்பிடிப்பில் கலாய்த்து அந்த இடத்தில் ஒரு சிரிப்பு அலையை ஏற்படுத்தி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்வார். அதே போன்று ஆல் இன் ஆல் அழகுராஜா படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்திக்கை கலாய்த்து தள்ளியுள்ளார் சந்தனாம், இது ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் தனக்கு அவமானம் என கார்த்திக் கருதியதை தொடர்ந்து, கார்த்திக் – சந்தானம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கை உருவாக்கியுள்ளதாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்த நிலையில், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் இயக்குனர் ராஜேஷிடம் நடிகர் சந்தானத்திற்கு பதில் வேறு ஒரு நடிகரை மாற்றம் செய்ய வேண்டும், சந்தானம் செயல்பாடுகள் படப்பிடிப்பு தளத்தில் எனக்கென இருக்கும் ஒரு இமேஜை டேமேஜ் செய்வது போன்று உள்ளது, படத்தில் நான் ஹீரோவா.? இல்லை சந்தானம் ஹீரோவா.? என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி சந்தானம் நடந்து கொள்வதாக கார்த்திக் இயக்குனர் ராஜேஷிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு இயக்குனர் ராஜேஷ், படத்தில் சந்தானம் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றது, மேலும் இதற்கு முன் என்னுடைய இயக்கத்தில் வெளியான மூன்று படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் சந்தானம், அதனால் நீங்கள் கூறும்படி அவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை மாற்றம் செய்ய முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் இயக்குனர் ராஜேஷ். இந்நிலையில் வேறு வழியின்றி சந்தானத்துடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்து முடித்து கொடுத்த கார்த்திக் அதன் பின்பு சந்தானத்துடன் இணைந்து நடிப்பதை நிறுத்தி கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.