இளையராஜா யாரென்று எனக்கு தெரியாது… கமல்ஹாசன் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : இசை உலகில் முடிசூடா மன்னன் இசைஞானி இளையராஜாவை தனக்கு யாரென்று தெரியாது என பிரபல கிஸ் நாயகன் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பட்டிதொட்டியெங்கும் இசைஞானி பாடல் ஒலிக்காத இடமே இல்லை. கல்யாணமா திருவிழாவா இல்லையென்றால் புதுவருடப்பிறப்பா இளையராஜா பாடல் ஒலிக்காத இடமே இருக்காது.

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகை சாவித்ரி கைகளில் தவழ்ந்தவர் உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கமலஹாசன். இவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சர்சைக்குரியது என்றாலும் தனது மகள்களை சரியாக வளர்க்கவில்லை என பலரால் விமர்சிக்கப்பட்டாலும் திரையுலகில் தனக்கென ஒரு தடத்தை பதித்தவர் கமலஹாசன்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் இசைஞானி இளையராஜா யாரென்றே தனக்கு தெரியாது என சொல்லியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 1970களில் திரைத்துறையில் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் நுழைந்த இளையராஜா இன்றுவரை கொடிகட்டி பறக்கிறார். நடிப்பில் ரஜினி சூப்பர்ஸ்டார் என்றால் இசையுலகில் சூப்பர்ஸ்டார் இளையராஜா.

இந்நிலையில் தற்போது தனது விக்ரம் பட விளம்பரத்திற்கான வேலைகளில் கமலஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். லோகேஷ் இயக்கத்தில் பகத் பாசில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான இந்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3 அன்று உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக விஜய் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அதில் இளையராஜா பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன் ” எனக்கு பலவருடங்களாக இளையராஜா யாரென்றே தெரியாது. கங்கை அமரனைத்தான் இளையராஜா என எண்ணிக்கொண்டிருந்தேன். அன்னக்கிளி பட பாராட்டு விழாவில் இளையராஜாவை அழைக்க சொன்னார்கள்.

நான் கங்கை அமரனை பார்த்து மேடைக்கு வரச்சொன்னேன். அப்போது இளையராஜா மேடைக்கு வந்தார். முதன்முதலில் அப்போது தான் இளையராஜா என்பதை தெரிந்துகொண்டேன். அப்போதுதான் இளையராஜாவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. முதலில் கங்கை அமரனை இளையராஜா என நினைத்து அழைத்தபோது அவர் வரமறுத்தார். எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் என நினைத்தேன்” என அந்த டிவி நிகழ்ச்சியில் பேசினார்.

கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?