ஆதாயத்திக்காக கமல் வாய் முடி இருப்பதா… தேவர் மகன் விவகாரத்தில் பொங்கி எழுந்த பேரரசு…

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம் என கொண்டாடப்படும் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், அந்தப் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், கமலஹாசனை எதிரே வைத்துக்கொண்டு மேடையில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் படம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசியது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாபெரும் கலைஞன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என கமல்ஹாசன் ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைதளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியான போது அந்தப் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு எதோ ஒரு காரணத்திற்காக அவர் மீது விமர்சனம் இருந்தாலும் கூட, கமல்ஹாசன் கலை மீதும், அவருடைய படைப்பு மீது விமார்சனம் வைக்க முடியாத அளவுக்கு திரையுலகின் பல்கலை கழகமாக திகழ்ந்து வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் மாரி செல்வராஜ் பேசிய சர்ச்சை கூறிய பேச்சு குறித்து இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் வாழ்த்த வந்த கமல்ஹாசனை இயக்குநர் மாரி செல்வராஜ் வசை பாடிவிட்டார் என்று இங்கே நிறைய கோப வீச்சுகள் பரவி வருகின்றன. ஆனால் கமல்ஹாசனுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை, கோபமும் இல்லை. அவருடைய உரையில் அதற்கான பதில் எதுவும் இல்லை. மேலும், மாரி செல்வாராஜை உயர்த்திப் பிடித்தே பேசினார் அது அவருடைய பக்குவமாக இருக்கலாம்.

அந்த இயக்குனர் கமல்ஹாசன் என்ற நடிகரை குறை சொல்லவில்லை, ‘தேவர் மகன்’ என்ற படைப்பை குறை கூறி இருந்தார். தான் நடித்த ஒரு படைப்பை குறிப்பாக தமிழகமே கொண்டாடிய ஒரு படைப்பை ஒருவர் குறை சொல்லும்போது அதற்கு பதில் அளிக்க வேண்டியது கடமை. கமல்ஹாசனை குறை கூறும் போது அதற்கு எந்தவித எதிர்வினையும் காட்டாதிருப்பது அவர் இஷ்டம்.

ஆனால் தான் நடித்த சிறப்பான படைப்பை ஒருவர் பொது மேடையில் குறை கூறும்போது அதற்கான விளக்கத்தை அளித்திருக்க வேண்டியது ஒரு நல்ல கலைஞனின் கடமை. அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு கலைஞனாக அல்ல, ஒரு அரசியல்வாதியாக இருந்து விட்டார். அரசியல் ஆதாயத்திற்காகவும், சினிமா வியாபாரத்திற்காகவும் தன் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்.

நாட்டு மக்களில் பலர் ஒரு நல்ல படைப்புக்காக பொங்கிஎழும்போது அந்தப் படைப்பால் ஆதாயம் பெற்ற ஒருவர் அமைதியாக இருந்தது வியப்பாக இருக்கிறது. மேலும் தேவர்மகனை குறை கூறும்போது அவருக்கு கோபம் வரவாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவருக்கு அது ஒரு சினிமா. ஆனால் ரசிகர்களுக்கு அது ஒரு சிறந்த படைப்பு. அது ஒரு சமூகத்தின் பதிவு. எனவே மக்களே! கமலுக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள். ஒரு படைப்பு, புரிதல் இல்லாதவரின் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டதே என்று மட்டும் கவலைப்படுவோம்! அதை புறம் தள்ளுவோம். இவ்வாறு பேரரசு கூறியுள்ளார்.