கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தியன் 2 படம் OTT – யில் வெளியான அடுத்த நிமிடமே அப்படத்தை ரசிகர்கள் இஞ்சி இஞ்சாக கலாய்த்து வருகின்றனர். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இதுவரை வெளியான எந்த ஒரு படமும் எந்த அளவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் கடமையான விமர்சனங்களை சந்தித்து இருக்குமா என்றால்? அனைவரும் இல்லை என்று தான் சொல்வார்கள்.
நண்பன், ஐ மற்றும் 2.0 படங்கள் கூட ஓரளவு விமர்சனங்களை தான் சந்தித்திருந்தது. ஆனால் அந்த படங்களையும் ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியன் 2 திரைப்படம் மட்டும் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒன்றாக ஒரே குரலில் ட்ரோல் செய்யும் அளவுக்கு மாற்றி இருக்கிறது.
இதனை திரைப்பட விமர்சனங்கள் பலரும் சங்கரிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்றும் இனி அவர் இயக்கம் படங்கள் மக்களை கவர வாய்ப்பில்லை என்றும் கூறி வருகின்றனர். மேலும் சுஜாதா மறைவுக்குப் பிறகு, சங்கர் படங்களில் வசனங்கள் கூட “சுமார் மூஞ்சி குமாராகத்தான்” இருக்கிறது என்றும் கலாய்த்து வருகின்றனர். மேலும் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு, முதலுக்கே மோசமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு உலக அளவில் பயங்கரமாக அடிவாங்கியுள்ளது அந்த படம். ஏற்கனவே சந்திரமுகி 2 மற்றும் லால் சலாம் என்று பல உள்காயங்களுடன் லைகா பயணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சங்கரின் இயக்கத்தில் தான் தவறு இருக்கும் என்று பார்த்தால் உலகநாயகன் கமலின் நடிப்பும் இப்படத்தில் சரியில்லை என கமல் ரசிகர்களே வசிப்பாடி வருகின்றனர். இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகி இருந்தது.
பெரிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் சினிமா உலகில் இதைவிட கேவலமான படம் இருக்க முடியாது என ரசிகர்களை திட்டி விமர்சிக்கும் அளவிற்கு இந்த படம் அமைந்திருக்கிறது. இந்தியன் 2 படம் கமலின் திரை வாழ்விற்கு POSITIVE-ஆக இருக்கும் என்று பார்த்தால் இந்த படத்தால் கமலின் சினிமா CARRIER-யே முடிந்து விடும் போல் இருக்கிறது.
கமல் இத்தனை வருடத்தில் நடித்த ஒட்டு மொத்த படங்களிலேயே மிகவும் கேவலமான படம் என்றால் அது இந்தியன் 2 படம் தான். சீரியஸான காட்சிகள் வரும் இந்த படத்தை கடைசியில் மக்களே ஜோக்கர் படம் என விமர்சிக்கும் வகையில் மாறி உள்ளது. இந்த சூழலில் சூடுபட்ட சிங்கம் போல தனது அடுத்த நகர்வுகளை மிகவும் கனகச்சிதமாக நகர்த்தி வருகின்றார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலக்கியது கூட, தனது படங்களில் அதிக கவனத்துடன் செயல்பட தான் என்று ஒரு பேச்சும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் Thug Life படத்திற்கும் புதிய கண்டிஷன் ஒன்றும் போட்டுள்ளாராம். கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்க்கிறார். கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டே Thug Life படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் எதிலும் இனி அவசரம் வேண்டாம், என்னுடைய 60 வருட சினிமா வாழ்க்கையில் இந்தியன் 2 படம் போன்று ஒரு அவமானத்தை சந்தித்தது இல்லை.
கிட்ட தட்ட என்னுடைய 60 வருட சினிமா வாழ்க்கையே முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்தியன் 2 படத்தை சங்கர் எடுத்து வைத்துள்ளார். அதனால் Thug Life படத்தை படத்தை அடுத்த ஆண்டு கூட வெளியிடலாம், எல்லா வேலைகளும் நிறுத்தி நிதானமாகவே செய்து கொள்ளலாம் என்று மணிரத்தினத்திடம் கமல் புலம்பி தவித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.