பயத்தில் அந்தர் பல்டி அடித்த கமல்ஹாசன்.. ரூ.300 கோடிக்கு வந்த ஆபத்து… யாருடைய மிரட்டலுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் பல நேரங்களில் கருத்துகளை வெளியிட்டு மக்களை குழப்பம் அடைய செய்துவிடுவார். அவருடைய கருத்துக்கள் பல அவருக்கே புரியுமா என்கிற சந்தேகம் மக்களுக்கு உண்டு. அதிலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் அரசியல் கருத்துக்கள். பல தமிழ் அறிஞர்களை அழைத்து ஆய்வு செய்தால் கூட விடை கிடைக்காது என்கிற விமர்சனம் உண்டு. இப்படி பலரை குழப்பும் வகையில் கருத்து தெரிவிக்கும் கமல்ஹாசன் சமீபத்திய பேட்டி மேலும் மக்களை குழப்பம் அடைய செய்துள்ளது.

சமுதாயத்தில் முக்கியமான நபராக கருதப்படும் கமல்ஹாசன், பொறுப்பில்லாமல் வாயிக்கு வந்ததை அடிச்சுவிட்டு சென்றது கடும் விமர்சனம் எழுந்துள்ளது, மாணவர்களுக்கு சினிமா நடிகர், நடிகைகள் பாடம் எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களை இழிவு படுத்தும் விதத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் பாடம் நடத்துவது சரியில்லை என்கிற தோரணையில் பேசியுள்ள நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் மற்றும் நடிகைகளுக்கு என்ன தகுதி இருக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க, திரைப்படத்தில் ஆபாச நடனம் ஆடுவது, இரட்டை வசனம் பேசுவது என,சமுதாயத்தை சீரழிக்கு வகையில் படம் எடுக்கும் நடிகர், நடிகைகள் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை என கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் கமல்ஹாசன் அச்சத்தின் காரணமாக அந்தர் பல்டி அடித்த மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்ப திருடன் கையில, தில்லாலங்கடி தில்லாலே என்கிற பத்தல பத்தல பாடல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நான் மத்திய பாஜக அரசை தான் குறிப்பிட்டு சொன்னேன் என சொல்வதற்கு திராணியற்று, நான் அணைத்து ஒன்றியத்தையும் தான் சொன்னேன் என கமல்ஹாசன் பின்வாங்கியுள்ள சம்பவம் குறித்த பல பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

விக்ரம் படம் அமோக வெற்றி பெற்று சுமார் 500 கோடி வரை வசூலை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவான விக்ரம் படத்தின் லாபம் மட்டும் சுமார் 300 கோடி வரை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த 300 கோடிக்கு கணக்கு கேட்டு மத்திய அரசு ரெய்ட் விட்டால், கமல்ஹாசன் மிக பெரிய சிக்கலில் சிக்கிவிடுவார் என்பதற்காக தான் விக்ரம் படத்தில் கூட பத்தல பத்தல பாடல் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய 300 கோடிக்கு ஆபத்து வந்து விடும் என்கிற அச்சத்தின் காரணமாக தான் சமீபகாலமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருக்கும் கமல்ஹாசன், பத்தல பத்தல பாடலில் ஒன்றியம் என்று குறிப்பிட்டது மத்திய பாஜக அரசை தான் என்று பதில் சொல்லாமல் அணைத்து ஒன்றியதையும் தான் சொன்னேன் என அந்தர் பல்டி அடித்து மீண்டும் மக்களை குழப்பம் அடைய செய்து விட்டு அவர் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

மனைவியுடன் வந்து அசிங்கப்பட்ட அட்லீ…! இதெல்லாம் ஒரு பொழப்பா காரி துப்பிய சினிமா வட்டாரம்..