மோடியால் மிக பெரிய சிக்கலில் சிக்கிய கமல்ஹாசன்… விக்ரம் படம் வெளியாகுமா.? என்ன சம்பவம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசனுக்கு தற்பொழுது மிக பெரிய கஷ்ட காலம் என்று சொல்லலாம், அந்த அளவுக்கு பல தடைகள், பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். கடந்த பத்து வருடங்களில் 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தை தவிர சொல்லும்படி ஏதும் கமஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெறவில்லை. கடந்த நான்கு வருடமாக எந்த ஒரு படமும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவில்லை.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தொடங்கிய இந்தியன் 2 படம் தொடங்கிய வேகத்தில் பாதியிலே நிற்கிறது. இனி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இந்தியன் 2 கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார்.

இதனால் தற்பொழுது எந்த ஒரு வருமானம் இன்றி தவித்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல் கட்சி தொடங்கி சினிமா வாழ்க்கையை தொலைத்து விட்டார் கமல்ஹாசன் என்று கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி எங்கே இருக்கிறது என தேடும் அளவுக்கு காணாமல் போனது. மேலும் கமல்ஹாசனும் சினிமாவில் தற்பொழுது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தற்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வெளியான பின்பு தான், கமல்ஹாசனை சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகர்கள் தர வரிசையில் 7வது இடத்தில இருக்கும் கமல்ஹாசனை, நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலர் முந்தி சென்றுள்ளனர். சினிமாவில் கமல்ஹாசனின் பின்னடைவுக்கு காரணம் அவருடைய அரசியல் வருகை தான் என கூறப்படுகிறது.

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் ஒரு பாடல் வெளியிட பட்டுள்ளது. அந்த பாடலில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கமல்ஹாசன். இதற்கு பாஜக தரப்பில் போலீஸ் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்ரம் படத்தை பலமுறை பார்த்த பின்பு தான் சான்றிதழ் தர வேண்டும் என தணிக்கை குழுவுக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தணிக்கை குழு பார்வைக்கு வர இருக்கும் விக்ரம் படம்.

இந்த படத்தில் அரசியல் அல்லது பிரதமர் மோடி குறித்து எதாவது சர்ச்சை கூறிய வகையில் காட்சிகள் இடம் பெற்று இருந்தால் அந்த காட்சிகளை நீங்க தணிக்கை குழு பரிந்துரை செய்வார்கள் என்றும். அதற்கு பட குழு மறுக்கும் பட்சத்தில். தணிக்கை குழு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பல்ஸ் அறிந்து படம் எடுத்தாலே வெற்றி பெற முடியும் என்றும், தேவையின்றி அரசியல் பேசி சிக்கலில் தான் சிக்க நேரிடும் என்கிற விமர்சனங்களையும் சினிமா துறையினர் ஏற்று கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

ரஜினிக்கு கிட்னி தானம் செய்தவர்க்கே இந்த நிலைமையா.? நன்றி உணர்வு இல்லாத ரஜினி குடும்பம்.. என்ன தெரியுமா.?