இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு திரைக்கு வர இருக்கும் படம் இந்தியன் 2. இதற்கும் முன்பு தென் இந்திய சினிமாக்களில் மிக பிரமாண்ட படைப்புகளை கொடுத்து பிரம்மாண்டத்தில் அசைக்க முடியாத இயக்குனராக வலம் வந்த ஷங்கர், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் மற்றும் கே.ஜி.எப் போன்ற படங்கள் வெளியான பின்பு ஷங்கரால் மட்டுமில்லை, எங்களால் அவரை விட பிரமாண்டமாக படம் எடுக்க முடியும் என ராஜமௌலி போன்ற இயக்குனர்கள் சாதித்து கட்டினார்கள்.
இந்நிலையில் எந்திரன் 2 ன் தோல்விக்கு பின்பு இந்தியன் 2 படத்தை தொடங்கிய இயக்குனர் ஷங்கர், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே, படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து, தயாரிப்பு தரப்புக்கும் சங்கருக்கும் இடையிலான பிரச்சனை என இந்தியன் 2 படம் பாதியிலே நின்றது, இதனை தொடர்ந்து தெலுங்கில் ராமச்சரன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க தொடங்கினார், இதன் பின்பு இந்தியன் 2 படத்தின் பிரச்சனையும் சுமூக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து ஒரே நேரத்தில் தமிழ் , தெலுங்கு என இரண்டு பேன் இந்தியா படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. இதில் கமலஹாசன் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டு தற்பொழுது அமெரிக்காவில் ஓய்வெடுக்க கமல்ஹாசன் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியன் 2 படத்தின் இயக்குனர் சங்கரும் தற்பொழுது அமெரிக்காவில் இருந்து வருகிறார்.
இந்தியன் 1 படத்தில் இந்தியன் தாத்தா தன்னுடைய இளம் வயதில் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தவர், வயதான காலத்தில் நாட்டில் புற்று நோய் போன்று பரவி இருக்கும் லஞ்சத்தை ஒழிக்க லஞ்சம் கொடுக்கும் ஒவ்வொரு அதிகாரியாக கொலை செய்கிறார் இந்தியன் தாத்தா, ஒரு கட்டத்தில் லஞ்சம் வாங்கும் மகனையே கொள்ள துணிந்த இந்தியன் தாத்தாவை கைது செய்கிறது காவல்த்துறை.
ஆனால் கவல்த்துறையிடம் இருந்து தப்பித்த இந்தியன் தாத்தா நினைத்தது போன்றே தன்னுடைய மகனை கொலை செய்துவிடுகிறார். இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தா 25 வயதில் அவர் சுதந்திரத்திற்காக போராடிய பிளாஸ் பேக் காட்சிகள் இடம்பெற இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது 60 வயதை கடந்துள்ள நடிகர் கமல்ஹாசனை 25 இளைஞனாக படமாக்க வேண்டும் என்பது மிக பெரிய சவாலான காரியம்.
கமல்ஹாசனுக்கு என்ன தான் மேக்கப் போட்டு இளமை தோற்றத்துக்கு கொண்டு வந்தாலும் கூட 25 வயது இளைஞனாக கட்சி படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்த இயக்குனர் சங்கர். அமெரிக்காவில் நவீன டெக்னாலஜி மூலம் 80 வயது மதிக்கத்தக்க ஒருவரை 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனாக காட்டும் வகையில் ஒரு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் படங்களில் 80 வயது மதிக்க தக்க நடிகர்களை 25 வயது போல் தோற்றம் அளிக்கும் வகையில் இந்த நவீன டெக்னலாஜி மூலம் உள்ள சாப்ட்வேரை பயன்படுத்தி காட்சி படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனை 25 மதிக்கத்தக்க இளைஞராக நவீன டெக்னலாஜி மூலம் காட்சி படுத்தும் வேலையில் அமெரிக்காவில் ஈடுப்பட்டு வருகிறார் சங்கர்.
இந்நிலையில் அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது சங்கரை சந்தித்து தன்னுடைய 25 வயது தோற்றம் எப்படி வந்துள்ளது என பார்த்து, அட நான் 25 வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கே என ஆச்சரியத்துடன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.