ஜீவா தான் இப்ப வரையும் என்ன காப்பாற்றுகிறார்… காமெடி நடிகர் கண்ணீர் பேச்சு…

0
Follow on Google News

தமிழ் சினிமா எத்தனை எத்தனையோ நகைச்சுவை நடிகர்களைக் கடந்து வந்துள்ளது. குழுவாக சேர்ந்து காமெடியில் கலக்குபவர்கள் பலர். அதில் ஒருவர் தான் அனைவருக்கும் பரிச்சமயமானவரான நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். வைகைப் புயல் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.

வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடிகர் பாவா லட்சுமணன் காமெடி அல்டிமேட். அதிலும் குறிப்பாக ‘மாயி’ படத்தில் இடம்பெற்ற ‘வா மா மின்னல்’ காமெடி காட்சி மூலம் மிகவும் பிரபலமானார். கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலம் ஆகும். அதுவும் சாப்பிட்டு சாயங்காலம் தேடலாம் வாத்தியாரே என்ற வசனம் மிக மிக பிரபலம் ஆகும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பாவா லட்சுமணன் தீவிர சிகிச்சைக்குக் பிறகு உயிர் பிழைத்து தற்போது நலமுடன் இருக்கிறார். சமீபத்தில் இவர் தனியார் ஊடகத்துக்க்கு அளித்த பேட்டி மூலம் சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளார். திருமண செய்து கொள்ளாதது, தனியாக சிறிய ரூம் ஒன்றில் வசிப்பது, உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது அவருக்கு உதவி செய்தவர்கள் என பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசி இருந்தார்.

அதில் அவர் பேசியதாவது, “நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது நடிகர் ஜீவா ஸ்கூல் படித்துக்கொண்டிருந்தார். சின்ன பையன் ஆகவே நான் பார்த்திருக்கிறேன். அப்ப இருந்து நான் அவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்ததால் என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது ஜீவா எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்ப தொடங்கினார் இப்ப வரைக்கும் அனுப்புகிறார்.

நான் கேட்டது கூட கிடையாது ஆனால் அவராகவே அனுப்பிவிடுவார். அதுபோல நான் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கும் போது ஆர்பி சவுத்ரி சார்தான் எனக்கு பெறும் தொகையை அனுப்பி வைத்து என்னுடைய மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டார். அதற்கு காரணம் நான் ஆர்பி சௌத்ரி சாரிடம் மேனேஜராக விஸ்வாசமாக வேலை செய்யும் போது ஜீவா எல்.கே.ஜி ஸ்கூல் ஸ்டூடென்ட்டா படிச்சுட்டு இருந்தார்.

நம்ம நிறுவனத்துக்காக இவ்வளவு உழைச்சு இருக்காரே என அவர்களாகவே செய்யும் உதவி தான் இது” எனத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் பாவா லட்சுமணன். அதே போல நான் மருத்துவமனையில் இருந்தபோது லொள்ளு சபா பழனியப்பன், ஆரோக்கிய தாஸ், தெனாலி, ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் வந்து எனக்கு பண உதவி செய்தார்கள். இயக்குநர் விக்ரமன் சார், கேபிஒய் பாலா, கேமராமேன் ரவிவர்மன் இப்படி பலரும் வந்து எனக்கு உதவி செய்துள்ளனர் என மனம் நெகிழ்ந்து பேசி உள்ளார் பாவா லட்சுமணன்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் ஜீவா, இவர், முதல் படத்தில் அறிமுகமானதைப் போலவே இன்றும் அதே துடிப்புடன் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் நேர்த்தியாக செய்து வருகிறார். ராம், கற்றது தமிழ் ஆகிய திரைப்படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர் ஜீவா.

இவரின் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸை கலக்கின. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க காத்திருக்கிறார் ஜீவா. இந்நிலையில் பாவா லட்சுமணன் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் மூலம் ஜீவா மற்றும் அவர் குடும்பத்தின் பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.