நடிகர் தனுசை மிக கடுமையாக சாடி நயன்தாரா வெளியிட்ட அந்த ஒத்த அறிக்கை தற்பொழுது தமிழகத்தில் மிகப் பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது. ஒரு தரப்பினர் தனுஷ்க்கு ஆதரவாகவும். ஒரு தரப்பினர் நயன்தாராவுக்கு ஆதரவாகவும் மிகப் பெரிய அளவில் தங்களுடைய வாதங்களை வைத்து வரும் இந்த சூழலில், யார் பக்கம் நியாயம் உள்ளது என்கின்ற பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக நயன்தாராவிற்கும் தனுஷுக்கும் எங்கே இவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டது என்கின்ற ஒரு திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது. நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்பிலிக்சில் சுமார் 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் நயன்தாரா. இந்த வீடியோவுடன் சேர்த்து நயன்தாரா குறித்த சில வாழ்க்கை நிகழ்வுகளை கலந்து netflixல் ஒளிபரப்புவதற்காக இது ஒரு படம் போல் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று நயன்தாராவிடம் netflix தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படி இதை ஒரு காதல் படமாக அதாவது, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவன் இடையில் எப்படி காதல் மலர்ந்தது என்பதையும் இந்த டாக்குமென்ட்ரி படத்தில் இணைத்துள்ளது நயன்தாரா தரப்பு. அதாவது தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் நடந்த சில கிளிப்பிங் இந்த டாக்குமென்டரி படத்தில் பயன்படுத்தினால் தான் அந்த டாக்குமென்ட்ரி ஃபிலிம் ஒரு அழகான வடிவத்திற்கு வரும்.
அந்த வகையில் நானும் ரௌடி தான் படத்தில் நடந்த சில கிளிப்பிங் காட்சிகளை இந்த டாக்குமெண்டரியில் இணைத்தது நயன்தாரா தரப்பு, ஒருவழியாக netflix இடம் மொத்த படத்தின் காட்சிகளும் வடிவமைக்கப்பட்டு நயன்தாரா கொடுத்துவிட்டார். ஆனால் netflix இந்த வீடியோவில் இருக்கும் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு சம்மந்தமான தயாரிப்பாளரிடம் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கிட்டு வரும்படி நயன்தாராவிற்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுசை அணுக வேண்டிய கட்டாயம் நயன்தாராவுக்கு ஏற்பட்டது. ஆனால் இதில் நயன்தாராவிற்கு தனுஷை அணுகுவதில் சில சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது நானும் ரவுடி தான் படத்தின் போதே நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி மற்றும் தனுஷ் இடையில் கடுமையான சண்டை நடந்துள்ளது. இதன் பின்பே தனுஷ் உடன் நயன்தாரா எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தனுஷிற்கு அழைப்பிதழ் கூட தனுசுக்கு கொடுக்கவில்லை. தனுஷிற்கு பத்திரிகை கூட இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை என்றால் தனுஷ் மீது இவர்கள் இருவருக்கும் எந்த அளவிற்கு வன்மம் இருக்கும் என்பது வெளிப்படுகிறது.
அந்த வகையில் ஒரு வேலை தனுசிற்கு தன்னுடைய திருமண அழைப்பிதழை கொடுத்து வரவழைத்து ஒரு விதத்தில் நட்புடன் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இருந்திருந்தால் இன்று அவர் வெளியிடும் டாக்குமென்ட்ரி படத்திற்கு அந்த நானும் ரவுடிதான் படத்தில் உள்ள மூன்று நிமிடம் கிளிப்பிங் பயன்படுத்தி செல்லுங்கள் இது என்னுடைய திருமண பரிசா கூட வைத்திருக்கட்டும் என்று தனுஷ் பெருந்தன்மையோடு விட்டு சென்றிருப்பார், ஆனால் திருமண அழைப்பிதழ் கூட கொடுக்காமல் தனுஷை அவமான படுத்தியா நயன்தாராவுக்கு எப்படி தன்னுடைய படத்தின் வீடியோ கிளிப்பை ஓசியில் கொடுப்பார் தனுஷ் என கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.