சிவகார்த்திகேயனை வீழ்த்த தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்… என்ன பிளான் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் மிகக் குறுகிய காலத்தில் சினிமாவில் அறிமுகமாகி, மிகப்பெரிய உச்சத்தை அடைந்து முன்னணி நடிகரானார் தனுஷ். ஆனால் தமிழ் சினிமாவில் அவருடன் இணைந்து துணை நடிகராக நடித்த நடிகர்கள் பலர் தனுசை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய உயரத்துக்கு சென்று விட்டார்கள். புதுப்பேட்டை படத்தில் தனுஷின் நண்பராக ஒரு ஓரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக தனுஷின் கூட்டாளியாக ஒரு சில காட்சிகளிலே மட்டும் நடித்தவர் விஜய் சேதுபதி.

ஆனால் விஜய்சேதுபதி இன்று, பல மொழிகளில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்து சுமார் ஒரு படத்திற்கு 30 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதே போன்று நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹீரோ என்கின்ற அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தன்னுடைய தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தவர் தனுஷ்.

ஆனால் சிவகார்த்திகேயன் இன்று தனுஷை ஓவர் டேக் செய்து விட்டு, அவரை விட அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்து அவருடைய மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்து. தனுஷ் சம்பளமும் குறைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் வாத்தி படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 10 கோடி. அதே போன்று திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் வாங்கிய சம்பளம் 15 கோடி.

ஆனால் தனுஷ் அடையாளம் காட்டிய சிவகார்த்திகேயன். ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 25 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான படங்கள் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து நடிப்பது தான் என கூறப்படுகிறது. தன்னுடைய சொந்த தயாரிப்பில் படம் நடித்து தனக்குத்தானே சம்பளத்தை உயர்த்தி கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்கு ஏற்றார் போல் அவர் நடிக்கும் படங்களும் ஹீட் அடித்துள்ளது.

இதன் நிலையில் சிவகார்த்திகேயன் பார்முலாவை கையில் எடுத்துள்ள தனுஷ். பொடி பையன் நான் அடையாளம் காட்டியவன் என்னை பின்னுக்கு தள்ளி என்னை விட அதிகம் சம்பளம் வாங்குகிறான். அவனை ஓவர் டேக் செய்கிறேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ள தனுஷ். அடுத்தடுத்து தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தால் போதும் கிடு கிடுவென தனது மார்க்கெட் உயர்ந்துவிடும். இதன் பின்பு மற்ற தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்கும் பொழுது தனக்கான சம்பளம் டாப் நடிகர்களுக்கு இணையாக அதிகரித்து விடலாம் என்கிற முடிவில் இருக்கிறார் தனுஷ் . இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வீழ்த்த சிவகார்திகேயன் பார்முலாவை கையில் எடுத்துள்ளார் தனுஷ் என கூறப்படுகிறது.

வருமான வரித்துறை வலையில் ஜோதிகா… காப்பாற்ற துடிக்கும் கணவர் சூர்யா என்ன செய்துள்ளார் தெரியுமா.?