தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தங்களுடைய மகன் என்று, சிறு வயதிலேயே வீட்டைவிட்டு சென்று விட்டதாக, மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் தனுஷிற்கு சாதகமாக இருந்ததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டது பெரும் இருவர் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், குடும்பத்தினர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரிடமும் குடும்ப உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா மகன் மற்றும் மருமகள் இருவரிடம் பேசியதில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், குடும்ப உறுப்பினர்களிடம் கூட ஏதும் பேசாமல் அமைதியாக இருந்து வரும் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மீது தான் அதிக கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ் -ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்த பின்பு அவர்களின் இரண்டும் மகன்கள் என்ன செய்வது என ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு நிலையில் தனுஷ் சர்ச்சைக்குரிய பெறோர்களான கதிரேசன் தம்பதியினர் பெருத்த வேதனை அடைந்து இருப்பதாகவும் அவர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர். அதில் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் இந்த முடிவு மிகவும் தவறானது மேலும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இவர்களை ஒன்றாக சேர்த்து வைக்கும் முயற்ச்சி செய்ய வேண்டும் எனவும்,
நாங்கள் வயதான காலத்தில் ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் மகனே கலையரசா நீ உனது பிள்ளைகள் மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக வாழ வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார் தனுஷின் சர்ச்சைக்குரிய பெற்றோர்களான கதிரேசன் மீனாட்சி ஜோடி. இந்நிலையில் இவர்களது இந்த பேட்டி சோசியல் மீடியாவில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருவது குறிப்பிடதக்கது.