விஜய்யை அடித்து துவம்சம் செய்த தனுஷ் … தனுஷிடம் தோல்வியடைய விஜய்யின் பரிதாபம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் வாரிசு. இந்த படம் மெகா சீரியல் போல் உள்ளது என்கின்ற விமர்சனத்தினால் படம் வெளியான அடுத்த நாளே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் குறைய தொடங்கியது. ஆனாலும் கூட சீரியல் போல் இருக்கின்றது என்கின்ற விமர்சனத்தினால், சீரியல் அடிமையாய் உள்ள பெண்களின் கூட்டம் திரையரங்குகளில் படையெடுக்க தொடங்கியதை தொடர்ந்து ICU வில் இருந்த வாரிசு படம் படம் மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வாரிசு படம் வெளியாகி அடுத்த மூன்று நாட்கள் கழித்து ஆந்திராவில் வெளியானது. இந்த படம் தெலுங்கு சாயல் கொண்ட படம் என்பதாலும். மேலும் தயாரிப்பாளரும் இயக்குனரும் தெலுங்கு சினிமா துறையை சார்ந்தவர்கள் என்பதாலும், தெலுங்கு சினிமாவில் படம் வெளியாகி மூன்று நாட்களில் சுமார் 50 கோடி ரூபாய் குறைந்தது வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்று நாட்களில் வெறும் எட்டு கோடி மட்டுமே வாரிசு படம் வசூலை பெற்றது, ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் வந்த பல படங்களின் கலவையாக இருந்தாலும் தெலுங்கு பட நடிகர் மகேஷ் பாபு சாயல் விஜய் என்கிற கேலி கிண்டல் விமர்சனத்துடன் வாரிசு படம் தெலுங்கு ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் நடித்த வாத்தி படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வாத்தி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வாரிசு படம் போன்று தெலுங்கு சினிமா துறையை சார்ந்தவர்கள். அந்த வகையில் வாரிசு மற்றும் வாத்தி இரண்டு படங்களுக்குமே தெலுங்கு சினிமாவில் மிக பெரிய வசூலை பெரும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வாரிசு ஏமாற்றினாலும், வாத்தி படம் தெலுங்கில் மிக பெரிய ஹிட் அடித்துள்ளது.வாத்தி படத்தின் தெலுங்கு வசூல் என்பது இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வசூலை விட அதிக வசூல் பெற்றுள்ளது.

மேலும் விஜய் நடிப்பு வெளியான வாரிசு படம் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் வெற்ற நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஷேர் மட்டுமே மூன்று நாட்களில் 12 கோடி வரை கிடைத்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர், மேலும் தனுஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான படங்கள் இதுவரை அதிகபட்சம் 3 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்ததில்லை.

அந்த வகையில் தனுஷ் நடிப்பு வெளியான வாத்தி படம் இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான படங்களை விட 4 மடங்கு அதிக ஷேர் பெற்று தந்துள்ளது. வாத்தி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது தொடர்ந்து ஜூப்ளிகில்ஸ் என்கின்ற ஒரு இடத்தில் உள்ள மிகப் பெரிய பிரம்மாண்ட பப்பில் பட குழுவினருக்கு பார்ட்டி வைத்துள்ளார் வாத்தி படத்தின் தயாரிப்பாளர், ஆனால் இந்த பார்ட்டியில் தனுஷ் கலந்து கொள்ள வில்லை.

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை விட அதிக வசூல் சாதனை படைத்துள்ளது. தனுசுடன் மோதி விஜய் தோல்வி அடைந்த சம்பவம் மிகப்பெரிய பரிதாபத்துக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.