சாதியவாத தமிழ் சினிமாவில் இது சாத்தியமில்லை.. சம்பட்டி அடி அடித்த தனுஷ்.. மெய் சிலிர்த்த முக்கிய தலைவர்..

0
Follow on Google News

தங்கள் படங்களை பிறமொழியில் ஓட வைப்பதற்காக, தமிழையும் தமிழ் நாட்டையும் இழிவு படுத்தும் வகையில் இதற்கு முன்பு பிற மொழி பேசும் மக்களிடம் தமிழ் சினிமா துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் நடந்து கொண்டுள்ளார்கள், அந்த வகையில் இதற்கு முன்பு ஆந்திராவில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம் ‘உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா?’ என்று கேட்டதற்கு.

அதற்கு கார்த்தி, “நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும்.என்று பதில் சொல்வது போல் பேசிய வீடியோ வைரலாகி தமிழர்கள் மத்தியில் கடும் எதிப்புக்கு உள்ளானது, அதே போன்று பொன்னியின் செல்வன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுஹாசினி. பொன்னியின் செல்வன் படம் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ளது என்று மலர்ந்த முகத்தில் மகிழ்ச்சியாகவும் ,

தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது சலிப்பாக, அந்த மொழி பேசும் மக்களை கவர்வதற்காக, தமிழ்நாட்டை குறைத்து சுகாஷினி பேசியது, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயல் என தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி பிற மொழி ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் மற்றும் தமிழ்நாட்டை இழிவு படுத்தும் வகையில் இதற்கு முன்பு நடந்து கொண்ட தமிழ் சினிமா துறையினர் மத்தியில், தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் தெலுங்கு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் தனுஷ் பேசுகையில், எனக்கு தெலுங்கு தெரியும், இருந்தாலும் நாம் அண்டை மாநிலம் அதனால் தமிழிலே பேசுகிறேன் என தன்னுடைய உரையை தமிழில் தனுஷ் தொடங்கிய போது கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள் தெலுங்கு ரசிகர்கள்,

தொடர்ந்து தனுஷ் பேசுகையில், இதற்கு முன்பு தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, கன்னட சினிமா,
மலையாள சினிமா, ஹிந்தி சினிமா என்று இருந்தது, இப்பொழுது அனைவரும் அனைத்து சினிமாவும் பார்ப்பதால், இவை அனைத்தும் இந்தியன் சினிமாவாக மாறிவிட்டது, நீங்க எல்லோரும் தமிழ் படம் பார்க்கிறீர்கள், அதுபோல் நாங்களும் தெலுங்கு படம் பார்க்கின்றோம். இந்த மாற்றம் மிகவும் அழகாக இருக்கின்றது.

நான் நடித்த தெலுங்கு படத்தை ப்ரொமோட் செய்வதற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன், இந்தப்படம் தமிழ்நாடு – ஆந்திரா பார்டரில் ஒரு கிராமத்தில் நடப்பது போன்ற ஒரு கதை, இரண்டு கலாச்சாரமும் கலந்து இரண்டு மொழிகளும் கலந்த இந்த கதையை பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தது, இது போன்ற ஒரு கதை அமைந்ததற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன் என தன்னுடைய தெலுங்கு படத்தை தமிழில் பேசி தனுஷ் ப்ரோமோஷன் செய்தை தெலுங்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் கை தட்டி ஆரவாரம் செய்ததை பார்க்க முடிந்தது.

தனுஷின் இந்த செயல் இதற்கு முன்பு தெலுங்கு ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தமிழை குறைத்து மதிப்பிட்டு பேசிய நடிகர் கார்த்திக், சுஹாசினி ஆகியோருக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது, அதே நேரத்தில் தமிழில் பேசினாலும், தமிழ்நாட்டை பெருமையாக பேசினாலும் கூட தெலுங்கு ரசிகர்கள் அதை வரவேற்கிறார்கள் என்பதும் தனுஷின் பேசிய போது பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தனுஷ் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பேசியது குறித்து தமிழ் சினிமாவில் சாதியவாத மற்றும் தேசிய எதிப்பை முன்னெடுத்து செல்லும் சினிமா துறையினருக்கு தரமான பதிலடியை பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கொடுத்துள்ளார், அவர் கூறுகையில், ஒரு தமிழ் நடிகர் தனுஷ்க்கு தெலுங்கு ரசிகர்கள் எவ்வளவு ஆரவாரம் செய்கிறார்கள் என்றால் அவர்கள், கலையை கலையாக பார்க்கிறார்கள், மொழியாக பார்ப்பதில்லை,

அதே வேளையில் தமிழ் நடிகர் தெலுங்கு ரசிகர்களிடம் மிகவும் பெருமையுடன் தமிழில் பேசுகிறார்,அதை தெலுங்கு ரசிகர் கூட்டம் மொழி புரியாமல் இருந்தாலும் கூட ஆரவாரத்துடன் வரவேற்று மகிழ்கிறார்கள், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பாகுபாடு இல்லாமல் இன்று கலைத்துறை இந்திய சினிமா என்கிற அளவு உயர்ந்து இருக்கிறது என்று சொல்லும் போது, இந்திய என்கிற வார்த்தைக்கு மிக அதிக வரவேற்பு கிடைக்கிறது.

இவையெல்லாம் ஜாதியவாதமும், தேசிய எதிர்ப்பும் தழைத்துவிட்ட தமிழ் திரைப்படத் துறையில் சாத்தியம் இல்லை என தெரிவித்த பேராசிரியர், மற்ற மாநில திரைப்படங்கள் கதை சொல்கிறது தமிழ் சினிமா மட்டும் தான் கருத்து சொல்லிக் கொண்டே இருக்கிறது என சுட்டி காட்டியுள்ளார்.