மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தங்களது மகன் தான் தனுஷ் என்றும், தனுஷ் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் நாடியிருந்தனர்.மேலும் பெற்றோராகிய தங்களை பார்க்க தனுஷை அனுப்பும்படி கதிரேசன் – மீனாட்சி தம்பதி, தனுஷ் மாமனாரான ரஜினிகாந்துக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தனர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடந்த போது, மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, தங்களது மகன் தனுஷ் பணி ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது வீட்டை விட்டு வெளியேறி, திரைத்துறைக்கு சென்று தற்போது நடித்து புகழ் பெற்று இருக்கிறார். அதனால் மாதம் 65 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
இதற்கு நடிகர் தனுஷ் தரப்பில் பதில் மனுவில், சென்னையிலுள்ள கேகே நகரில் உள்ள சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை தனுஷ் படித்தார் என்றும், அதற்கான சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தனர். இதையடுத்து கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தனுஷின் பெற்றோர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தான் என்றும் உய்ரநீதிமன்றம் இதற்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக தனுஷ் தரப்பில் வழங்கிய பிறப்பு சான்றிதழில் பதிவு எண் இல்லை என்று கதிரேசன் என்பவர் மீண்டும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். தங்களது மகன்தான் நடிகர் தனுஷ் என்றும், உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் தரப்பில் சமர்ப்பித்த பிறப்புச் சான்றிதழில் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்த சான்றுகள் அனைத்தும் போலியான ஆவணங்கள் என்றும்.
மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் புதிய வழக்கு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்த மனு தொடர்பாக நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ் பெற்றோர் யார் என்பது தொடர்பாக மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.