நயன்தாராவுக்கு எதிராக காசு கொடுத்து ஆட்களை இறக்கிய தனுஷ்… சமாளிக்க முடியாமல் திணறும் நயன்தாரா…

0
Follow on Google News

நடிகை நயன்தாரா தனுஷ் இருவருக்குமான பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தங்களால் முடிந்த அளவு மாற்றி மாற்றி ஒருவரை ஒருவரின் இமேஜை காலி செய்ய முடியுமோ.? அந்த அளவுக்கு தர லோக்கல் ஆக இறங்கி வேலை செய்ய தொடங்கி விட்டனர் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான நயந்தாரா குறித்த டாக்குமெண்டரி படம் வெளியாவதற்கு முதல் நாள், பக்கம் பக்கமாக தனுஷ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை வெளியான உடனே பலரும் நயன்தாராவிற்கு ஆதரவாகவும் தனுஷை மிக கடுமையாக விமர்சித்தும் பல சினிமா சேனல்களில் வீடியோக்கள் வெளியானது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த விஷயத்தில் நயன்தாரா மீது தான் தவறு தனுஷ் நல்லவர் வல்லவர் என்று புகழ் பாடத் தொடங்கினார்கள் அதுவரை நயன்தாராவுக்கு முட்டுக் கொடுத்து வந்த பலரும். மேலும் அவர்களே தனுஷை அதற்கு முன்பு பலவகையில் விமர்சனம் செய்திருந்தார்கள். இதன் பின்னணி குறித்து விசாரித்ததில் நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் பல நடிகைகளும் நயன்தாராவின் அறிக்கைக்கு லைக் போட்டு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இதனால் தனுஷின் இமேஜ் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆகும் சூழல் உருவாகி இருந்தது. ஆனால் நடிகர் தனுஷ் தரப்பில் சில முக்கிய சினிமா யூ டியூப் சேனல்களை அழைத்து அவர்களுக்கு பணத்தை கொடுத்து இந்த விஷயத்தில் தனுசுக்கு , சாதகமாக பேசும்படியும் நயன்தாராவின் இமேஜ் மிகப்பெரிய அளவில் கிழித்து தொங்க விடப்பட வேண்டும் என்றும் தனுஷ் தரப்பில் இருந்து பணம் கொடுத்து பல youtubeபர்களை களம் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையிலேயே தொடர்ந்து சமீபகாலமாக குறிப்பிட்ட சில முக்கிய சினிமா பத்திரிக்கையாளர்கள் பலரும் நயன்தாரா குறித்து கண்டபடி பேசி தனுசை புகழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் நயன்தாரா சமீபத்தில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சினிமா சேனல்கள் குறித்து, அவர்கள் எல்லாம் குரங்குகள் என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது ஏற்கனவே நயன்தாரவுக்கு எதிராக பேச தனுஷ் தரப்பில் காசு கொடுத்து பேசி வந்தவர்களுக்கு, டாப் ஆப் செய்யும் வகையில், மீண்டும் நயன்தாரா விவகாரத்தை ஊதி பெரிதாக்கி அவரை எந்த அளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமா அந்த அளவுக்கு ஒவ்வொரு சேனல்களுக்கு சென்று கிழித்து தொங்க விடுங்க என தனுஷ் தரப்பில் பணம் டாப் ஆப் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here