டி.என்.ஏ பாதுகாக்க வேண்டும்… தனுஷ் பிறப்பு சான்றிதழ் தவறானது… கதிரேசன் வழக்கறிஞர் பரபரப்பு..

0
Follow on Google News

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரை மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாக்ஷி தம்பதியினர் மதுரை உயர்நிதி மன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கில், சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் அவர் சென்றுவிட்டார், ஆகையால் மகன் தனுஷிடம் இருந்து மாதம் எங்களுக்கு உதவி தொகை பெற்று தரவேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடந்த போது, மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, தங்களது மகன் தனுஷ் பணி ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது வீட்டை விட்டு வெளியேறி, திரைத்துறைக்கு சென்று தற்போது நடித்து புகழ் பெற்று இருக்கிறார். அதனால் மாதம் 65 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

இதற்கு நடிகர் தனுஷ் தரப்பில் பதில் மனுவில், சென்னையிலுள்ள கேகே நகரில் உள்ள சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை தனுஷ் படித்தார் என்றும், அதற்கான சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தனர். இதையடுத்து கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தனுஷின் பெற்றோர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தான் என்றும் உய்ரநீதிமன்றம் இதற்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக தனுஷ் தரப்பில் வழங்கிய பிறப்பு சான்றிதழில் பதிவு எண் இல்லை என்று கதிரேசன் என்பவர் மீண்டும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு புதிய மனுவை தாக்கல் சசெய்தார், தங்களது மகன்தான் நடிகர் தனுஷ் என்றும், உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் தரப்பில் சமர்ப்பித்த பிறப்புச் சான்றிதழில் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்த சான்றுகள் அனைத்தும் போலியான ஆவணங்கள் என்றும்.

மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் புதிய வழக்கு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர், இந்த வழக்கு விசாரணை குறித்து இன்றும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கதிரேசன் தற்போது உடல்நலகுறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது டி.என்.ஏ. வை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என அவரது மனைவி மீனாட்சி கோரிக்கை மனு ஒன்றை மருத்துவமனைக்கு அளித்தார்.இது குறித்து கதிரேசன் – மீனாட்சி தம்பதியினரின் வழக்கறிஞர் டைட்டஸ் கூறுகையில், கதிரேசனின் வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவரது டி.என்.ஏ. வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம்.

ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து இருந்தார். பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார். எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் – மீனாட்சி ஆகியோர்தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றது என தெரிவித்த வழக்கறிஞர் டைட்டஸ்.

எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்ப்பதாக கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது கதிரேசன் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.