சொல்லி அடித்த தனுஷ்… திருசிற்றம்பலம் எப்படி இருக்கு.. சிறப்பு திரைவிமர்சனம்.!

0
Follow on Google News

சன் பிக்சர் தயாரிப்பில் வெளியாகியுள்ள திருசிற்றம்பலம் படத்தில் தனுஷ், நித்யா மேனன், ரசிகா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா இன்னும் பலர் நடித்துள்ளார்கள். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல வருடங்கள் இடைவேளைக்கு பின்பு மீண்டும் தனுசுடன் கைகோர்த்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் மித்ரன்.

அனைவரும் கொண்டாடும் ஒரு எதார்த்த நகைச்சுவை படமாக அமைந்துள்ளது இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராஜின் மகன் தனுஷ், பாரதிராஜா பேரனாக தனுஷ் படிப்பை பாதியிலே விட்டுவிட்டு சுகியில் உணவு டெலிவரி பையனாக வேலை செய்கிறார். தந்தை பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையே ஒத்தே வராது. பாரதிராஜா தன்னுடைய பேரன் தனுசு உடன் பீர் அருந்தும் அளவுக்கு இருவருக்கும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

நகைச்சுவை நடிகர்கள் யாரும் இந்த படத்தில் இடம்பெறவில்லை, இருந்தும் பாரதிராஜா மற்றும் தனுஷ் இருவரும் இடம்பெறும் ஒவ்வொரு காட்சிகளும் திரையரங்குகளில் சிரிப்பு சத்தம் இடைவிடாது தொடர்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு பேரனுக்கும் தாத்தாக்கும் உள்ள உறவை அழகாக எடுத்துரைத்துள்ளார்கள். தனுஷ் குடியிருக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் மேல் தளத்தில் இருக்கும் நித்யா மேனன் ஐந்து வயதிலிருந்து தனுசுக்கு நெருங்கிய தோழியாக இருக்கிறார்.

தனுஷின் துக்கம் இன்பம் என அனைத்திலும் பங்கேற்றுக் கொள்கிறார் நித்யாமேனன், உணவு டெலிவரி பையனாக இருக்கும் தனுஷ், ஏற்கனவே பழக்கமான ராசிகா மேனன் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய செல்கிறார், அப்போது ராசிகாமேனன் தனுஷ் டிப்ஸ் கொடுக்கிறார், ராசிகா மேனனை காதலிப்பதாக தனுஷ் தெரிவிக்கிறார். ஆனால் இந்த காதலை ராசிகா ஏற்க மறுத்து விட்டார்.

அதேபோன்று முறை பெண் பிரியா பவானி சங்கரையும் காதலிப்பார் தனுஷ், அந்த காதலும் பிரியா சங்கர் ஏற்றுக் கொள்ளாமல் தோல்வியை தழுவுகிறது. இப்படி தொடர்ந்து இரண்டு காதலில் தோல்வியடைந்து நொந்து போய் இருப்பார் தனுஷ். இப்படி சோகத்தில் இருக்கும்போது தன்னுடைய தாத்தா பாரதிராஜா ஆலோசனைப்படி சிறுவயதில் இருந்து தோழியாக இருக்கும் நித்தியா மேனனை காதலிப்பதாக தனுஷ் தெரிவிக்க அந்த காதலும் தோல்வியை அடைகிறது.

அனிருத் இசை இந்த படத்தில் தியேட்டரில் பார்ப்பவர்களை சீட்டில் உட்கார விடாமல் எழுந்து நின்ற ஆட்டம் போட வைக்கிறது. படத்தின் கோரியோகிராப் வேற லெவலில் உள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டுமே என்றாலும், சிறப்பாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகி ராசிகா இரண்டு காட்சிகளில் தான் வருகிறார், அதேபோன்று பிரியா பவானி சங்கர் ஒரு மூன்று காட்சிகளில் மட்டும்தான் வருகிறார்.

படம் முழுக்க முழுக்க நித்யா மேனனை மையப்படுத்தி கதை நகழ்கிறது நகல்கிறது. நித்யாமேனன் நடிப்பு அபாரம், படத்தை பார்க்கின்றவர்களுக்கு நித்தியாமேனன் போன்று ஒரு கேர்ள் பிரண்ட் இதுக்கு முன்பு இருந்திருந்தால் அவர்களுக்கு நினைவுக்கு வந்து செல்லும், அல்லது இதுபோன்ற கேர்ள் பிரண்ட் நம்மளுக்கு இல்லையே என்கின்ற வருத்தம் ஏற்படும். மொத்தத்தில் தனுஷ் சொல்லி அடித்து வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த ஏமாற்று வேலை வேண்டாம்…. வெற்றிமாறன் – விஜய்சேதுபதி உச்சகட்ட மோதல்… என்ன காரணம் தெரியுமா.?