நடிகர் தனுஷ் அவருடைய மாமனார் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டின் அருகிலேயே சுமார் பல கோடி ரூபாய் மதிப்பில், அந்த ஏரியாவில் இதுவரை யாரும் இதுபோன்று பிரம்மாண்டமாக கட்டப்படாத வகையில் மிகப்பெரிய பங்களா வீட்டை கட்டிய தனுஷ் சமீபத்தில் தான் தன்னுடைய தாய் தந்தையுடன் புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்வை நடத்தி முடித்தார்.
தனுஷ் போயஸ் கார்டன் வீடு கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கிய போது, மாமனார் ரஜினிகாந்த் , மாமியார் லதா ஆகியோரை வைத்து தொடங்கியவர், வீட்டின் கட்டிட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து, பிரிந்தனர், இதனால் புதிதாக தனுஷ் கட்டி வந்த பல கோடி ரூபாய் பிரமாண்ட பங்களா பெரும் சிக்கலில் சிக்கியது.
தனுஷ் , அவருடைய மனைவியுடன் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் போயஸ் கார்டானில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் அவ்வளவு பெரிய வீட்டை தைரியமாக கட்ட தொடங்கியதற்கு முக்கிய காரணம், கட்டிடம் கட்டும் போது பணம் பத்தவில்லை என்றால், மனைவி ஐஸ்வர்யா மூலம் மாமனார் ரஜினிகாந்திடம் பண உதவி பெற்று மீத கட்டிடத்தை முடித்து விடலாம் என்கிற கனவில் தான் போயஸ் கார்டனில் மாமனார் வீட்டின் அருகில் பிரமாண்ட பங்களாவை கட்ட தொடங்கினார் தனுஷ்.
இந்நிலையில் போயஸ் கருடன் வீட்டின் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கையில், தனுஷ் மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இப்படி ஒரு சூழலில் தனுஷ் கட்டி வந்த பிரமாண்ட வீடு பணமில்லாமல் பதிலில் நின்று விடுகிறது. மனைவியை விட்டு பிரிந்த பின்பு மாமனாரிடம் உதவி கேட்டு போக முடியாத சூழல் தனுஷுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடுமையான கடும் பணம் நெருக்கடி தனுஷுக்கு ஏற்பட்டவுடன் உடனே தற்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரிடம் நேரடியாக சென்று, தனக்கு உடனே பணம் தேவைப்படுகிறது, உங்கள் தயாரிப்பில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கால் சீட் தருகிறேன் என சுமார் 20 கோடி ரூபாய் தனுஷ் அட்வான்ஸ் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் தொகையை வாங்கி பாக்கி கட்டிடத்தை கட்டி முடித்த நடிகர் தனுஷ், அந்த தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்திற்கு சொன்னது போன்று கால் சீட் கொடுக்கவில்லை, தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் தனுஷ். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த தயாரிப்பாளருக்கும், தனுஷுக்கு இடையில் இது தொடர்பாக பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வாங்கிய பணத்திற்கு கால் சீட் கேட்ட தயாரிப்பாளரிடம், மூன்று வருடம் கழித்து கால் சீட் தருகிறேன் என தனுஷ் தெரிவித்து இருக்கிறார். அதற்கு அந்த தயாரிப்பாளர், மூன்று வருடம் கழித்து கால் சீட் தருகிறேன் என்றால், வட்டி என்னாச்சு, என்னை நம்பி பைனான்ஸ் செய்த பைனான்சியர்கள், மூன்று வருடம் கழித்து பைனான்ஸ் செய்வார்களா.? இது உங்களுக்கே நியாயமா.? எனா தயாரிப்பாளர் கேட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் நீங்கள் கால் சீட் தரவில்லை என்றால் என்னிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பி தாருங்கள் என தயாரிப்பாளர் கேட்க அதற்கு தனுஷ் சம்மதிக்கவில்லையாம், மேலும் மருமகன் பஞ்சாயத்து மாமனார் ரஜினியின் கவனத்திற்கு சம்பந்த பட்ட தயாரிப்பாளர் எடுத்து சென்ற போது, மாமனார் தரப்பு, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கைவிரித்து விட்டதாம்.
இந்நிலையில் சம்பந்த பட்ட தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டதை தொடர்ந்து, தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைக்காத நடிகர் வரிசையில் தனுஷ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோடி ரூபாய் மதிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தனுஷ் வீட்டின் உள்ளேயே ஸ்விம்மிங், உடற்பயிற்சி செய்வதற்கான ஜிம், மற்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு கிரிக்கெட் பிச் போன்ற பல வசதிகளை உள்ளடக்கிய இந்த வீட்டை கட்டுவதற்காக வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறாராம் தனுஷ்.