திருடி படம் எடுக்குற உங்களுக்கு வெட்கமே இல்லையா… வெளுத்து வாங்கிய வேல ராமமூர்த்தி…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. பேன் இந்தியா படமாக உருவாகியிருந்தாலும், கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாகவில்லை. பொங்கலுக்கு ரிலீஸான படங்களில் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் பார்க்கும் படி இருந்தாலும், கேப்டன் விஜயகாந்த் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தாத தனுஷ் படத்தை புறக்கணிப்போம் என மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதனால் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் எதிர்பார்த்த வசூலை பெற முடியவில்லை, இந்நிலையில் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீப காலமாகவே கதை திருட்டுகள் அதிகமாக தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது, அதாவது, உலகிலே மிக பெரிய மோசமா திருட்டு என்றால், அடுத்தவன் கற்பனையை திருடுவது தான்.

ஒருவன் தன்னுடைய சுய அறிவினால் சிந்தித்து உருவாக்கிய ஒரு விஷயத்தை, அவனுக்கே தெரியாமல், அந்த விஷயத்தை திருடி இதை நான் தான் சிந்தித்து உருவாக்கினேன் என ஒரு பாராட்டுகளை பெற்று செல்வது என்பது, மிக கொடுமையான திருட்டு, அந்த வகையில் புதுமுக இயக்குனர்கள் வாய்ப்பு கேட்டு நடிகர்களிடம் கதை சொல்ல சென்றால், அந்த கதையை கேட்டுவிட்டு கதை பிடிக்கவில்லை என புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்காமல்.

அதே கதையை தனக்கு பிடித்த இயக்குனரிடம் சொல்லி, இந்த கதையை வைத்து ஒரு படம் பண்ணலாம் என அடுத்தவன் கற்பனை திருடி படம் எடுக்கும் சினிமாவில் அதிகாரம் படைத்தவர்கள், இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1930 களில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் படம் உருவாகியுள்ளது. தனது மக்களுக்கு எதிராக நிகழும் கொடூரமான குற்றங்களில் இருந்து காப்பாற்ற புரட்சிகாரனமாக ஹீரோ மாறுவதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி, இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் கதை அருண் மாதேஸ்வரனுடையது அல்ல தன்னுடையது என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி கூறியிருக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். என் நாவலின் ஹீரோ, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பார். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை கொஞ்சம் மாற்றி ‘கேப்டன் மில்லர்’ படமாக எடுத்துள்ளனர்.

நானும் சினிமாவில்தான் இருக்கிறேன். என்னிடம் அனுமதி கேட்டு அதை எடுத்திருக்கலாம். இதுபோன்று என் சிறுகதைகள், நாவல்களில் இருந்து நிறைய விஷயங்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள். புகார் தந்தாலும்.. வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். பேர்,ஊர், சீக்வன்ஸ் போன்றவற்றை மாற்றி படத்தை எடுத்திருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் தப்பிக்க செய்யும் முன்னேற்பாட்டு யுக்திகள்.என் வேதனையை வெளிப்படுத்திய வேத ராமமூர்த்தி.

மேலும், தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக இருக்கிறது. ஒரு படைப்பாளியாக இது வேதனையாக இருக்கிறதுநானும் சினிமாவில் தான் இருக்கிறேன். என்னிடம் அனுமதி கேட்டு அதை எடுத்திருக்கலாம். இதுபோன்ற என் சிறுகதைகள் நாவல்களில் இருந்து நிறைய விஷயங்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள். இதற்கு பட குழு தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார் வேல ராமமூர்த்தி.