தனுஷ் கூப்பிட கூப்பிட்ட வராமல் அடம் பிடித்த பிரபல நடிகை… உடனே ஓகே சொன்ன திரிஷா…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் விரைவில் அவருடைய 50வது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் 50வது படத்தை தனுஷே நடித்து இயக்க இருக்கிறார். தன்னுடைய 50வது படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ள தனுஷ். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்கின்ற ஒரு டிஸ்கசனும் நடத்தியுள்ளார். அப்போது தன்னுடைய ஐம்பதாவது படம் ஒரு ஃபேன் இந்தியா படமாக இருக்க வேண்டும்.

மேலும் பிற மொழிகளிலும் இந்த படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என தனுஷ் விரும்பியுள்ளார். அதற்காக இந்த படத்தில் பிற மொழியில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பது என முடிவு செய்த தனுஷ். தனக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகையை நடிக்க வைப்பது என முடிவு செய்து, தற்பொழுது ஹிந்தி சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் கங்கனா ரனவ்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.

இது தொடர்பாக ஹிந்தி நடிகை கங்கனா ரனவ்தை சந்தித்து தனுஷ் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. நடிகர் தனுஷ் படம் என்றதுமே வேண்டாம் என மறுத்த கங்கனா ரனவ்த், தன் கைவசம் படம் அதிகமாக உள்ளது, என்னால் இப்போது கால் சீட் தரமுடியாது என மறுத்துவிட்டார் கங்கனா ரனவ்த், ஆனால் கங்கனா ரனவ்தை சந்திப்பதற்கு முன்பே அவர் ரெம்ப பிசியெல்லாம் கிடையாது, அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளில் கமிட்டாகி வருவதை நன்கு தெரிந்து கொண்டு தனுஷ் தரப்பு பேச்சுவார்தைகே வந்துள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை கங்கனா ரனவ்திடம் தொடர்ந்து பேசிய தனுஷ் தரப்பினர், கதை சொல்வதற்கு நேரம் கேட்டுள்ளார்கள், இந்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதால், அவரே உங்களை சந்தித்து கதை சொல்ல இருக்கிறார், ஆகையால் கதை கேட்பதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள். உங்களுக்கு நிச்சயம் கதை பிடிக்கும், கதையை கேட்டுவிட்டு பிறகு இந்த படத்தில் நடிப்பதா.? வேண்டாமா.? எனபதை முடிவு செய்யுங்கள் என தனுஷ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்பொழுது என்னால் கால் சீட் தரமுடியாது, அப்படி இருக்கையில், கதை கேட்டு எதற்கு எனக்கு டைம் வேஸ்ட், அதே போன்று கதை சொல்ல வரும் தனுஷ்க்கு டைம் வேஸ்ட் என தெரிவித்த கங்கனா ரனவ்த் தனக்கு கதை கேட்க கூட நேரம் இல்லை, அந்த அளவுக்கு பிசி என்கிற தோரணையில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் நடிகை கங்கனா ரனவ்த்.

இந்த நிலையில் கங்கனா ரனவ்த் தான் ரொம்ப பிசியாக இருப்பதாக தெரிவித்துவிட்டு, தனுஷ் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தூக்கி எறிந்தவர், ஆனால் அடுத்தடுத்து மற்ற நடிகர்கள், அதாவது தனுஷை விட மார்க்கெட்டில் பின் தங்கியுள்ள நடிகர்கள் படத்தில் கங்கனா ரனவ்த் கமிட்டாகி வருகிறார். இந்த நிலையில் கால் சீட் இல்லாத காரணத்தினால் தனுஷ் படத்தை கங்கனா ரனவ்த் புறக்கணிக்கவில்லை.

மேலும் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக தான் தனுசுடன் ஜோடி சேர அவருக்கு விருப்பமில்லை என்றும் அதனால் தான் தனுஷ் படத்தை புறக்கணித்துவிட்டு மற்ற நடிகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் படத்தில் கங்கனா ரனவ்த் நடிக்க முடியாது என்றதும், அடுத்ததாக ஹிந்தியில் இனி மேலும் ஒரு நடிகையை தேடி நடிக்க வைக்கும் முயற்சியை கைவிட்ட நடிகர் தனுஷ்.

தமிழிலேயே ஒரு நடிகையை தேர்வு செய்யலாம் என முடிவு செய்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் தனுஷ் உடன் கொடி படத்தில் ஜோடியாக நடித்த திரிஷா, இன்றும் தனுஷ் உடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் தனுஷ் படத்திலிருந்து நடிப்பதற்கான அழைப்பு வந்ததும் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் உடனே ஓகே செய்து விட்டாராம் திரிஷா. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து இயக்க இருக்கும் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது என கூறப்படுகிறது.