எதற்கும் துணிந்த தனுஷ்.. மீண்டும் அதே தவறை துணித்து செய்யும் தனுஷ்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் இளம் வயதிலே தொடர் வெற்றி படங்களை கொடுத்து முன்னனி நடிகராக இடம் பெற்றவர். அவர் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து. இதன் பின்பு தனுஷ் சினிமா வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதன் பின்பு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய தனுஷ், தன்னுடைய படத்தில் எந்த நடிகை நடிக்க வேண்டும்,இயக்குனர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரமிக்க இடத்துக்கு வந்தார் தனுஷ், இதன் பின்பு தான் நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்க ஆரம்பித்தார் தனுஷ்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் தொடர் தோல்வியை சந்தித்த தனுஷ்க்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம். ஒருக்கட்டத்தில் கடன் சுமையால் தத்தளித்தது. சசிகலா உறவினர் ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் ஜெயராம் அவர்களிடம் மட்டும் சுமார் 80 கோடி வரை கடன் பெற்று இருந்தார் தனுஷ். ஒரு கட்டத்தில் கடும் கடன் சுமையால் தத்தளித்து வந்த தனுஷ் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட்டால் போதும், இனி பட தயாரிப்பை நிறுத்தி விடுவோம் என்கிற முடிவுக்கு வந்தார்.

இதனை தொடர்ந்து மாமனார் ரஜினிகாந்தை வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படத்தை தயாரித்து மிக பெரிய லாபத்தை சம்பாரித்து இது வரை வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட வேண்டும் என முடிவு செய்த தனுஷ், ரஜினி நடித்த கபாலி பட இயக்குனர் ரஞ்சித்திடம் கபாலி போன்று சிறிய பட்ஜெட் படம் ஓன்று தன்னுடைய தயாரிப்பில் எடுக்க ஒப்பந்தம் செய்து, ரஜினிகாந்திடம் கால்சீட் வாங்கி காலா படத்தையும் தொடங்கினார் தனுஷ்.

இந்நிலையில் காலா படம் வெளியாகி எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்க்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் கடும் கடன் சுமைக்கு ஆளான தனுஷ். மாமனாரை நம்பி பெரிய லாபத்தை சம்பாரித்து கடனை திருப்பி செலுத்தி விடலாம் என்று திட்டமிட்ட தனுஷ்க்கு மிக பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது என்கிற கடும் நெருக்கடியில் சிக்கி ஏற்பட்டது

கடனை அடைக்க தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படத்திற்கு கால்சீட் கொடுத்து, அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிய தனுஷ், பின்பு தான் வாங்கிய மொத்த கடனையும் அடைந்து விட்டு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார் தனுஷ், இதனை தொடர்ந்து தாணுவிடம் போட்ட ஒப்பந்தப்படி, அவருடைய தயாரிப்பில் அசூரன், கர்ணன் , நானே வருவேன், ஆகிய மூன்று படங்களில் நடித்து முடித்து கொடுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தையும் பெற்று தருகிறது, மேலும் தனுஷ் கைவசம் அடுத்தடுத்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் மாரிசெல்வம் ஆகியோர் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகும் சினிமாக்கள் நல்ல வெற்றியை கொடுத்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வரும் அதை பார்த்த நடிகர் தனுஷ் சில வருடங்களுக்கு இழுத்து மூடப்பட்ட தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அடுத்தடுத்து வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் படத்தில் கமிட்டாகி உள்ள தனுஷ், அந்த படங்களை தன்னுடைய சொந்த தயாரிப்பில் எடுப்பதற்கான முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதை சரியாக வழிநடத்த முடியாமல் பெரும் கடன் சுமையில் தத்தளித்து வந்த தனுஷ் கடும் போராட்டத்திற்கு பின்பு அந்த கடனை அடைத்து பின்பு தயாரிப்பு தொழிலே வேண்டாம் என்று இழுத்து மூடினார்.

ஆனால் மீண்டும் தற்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை தூசி தட்டி திறந்து, ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் பலத்த அடிவாங்கியுள்ள தனுஷ் பேராசையின் காரணமாக மீண்டும் அதே தவறை செய்ய தொடங்கிவிட்டார் என்கிற விமரிசனமும் எழுந்துள்ளது.