தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் இரண்டு படங்களும் திரையரங்குகளில் மோதிக்கொண்டன. இரண்டு படங்களும் வெளியாகி ஐந்து நாட்கள் முடிந்துள்ள நிலையில் அவற்றின் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான வசூல் விவரங்களின்படி, தனுஷின் கேப்டன் மில்லரை சிவகார்த்திகேயனின் அயலான் ஓரம் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களை ஒருவராக சிவகார்த்திகேயன் பலம் வருகிறார் என்றால், அவரது வளர்ச்சிக்கு நடிகர் தனுஷ் செய்த உதவிகளும் முக்கிய காரணமாகும். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயன் பட நடிக்கும் படங்களை தயாரித்து, சிவகார்த்திகேயனை சினிமாவில் வளர்த்து விட்டார். அதன் பிறகு, இருவரிடையே பிரச்சனை ஏற்பட்டது.தற்போது இருவரும் அவரவர் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஜனவரி 12ஆம் தேதி இருவரின் படங்களும் திரையரங்குகளில் மோதிக்கொண்டன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் கேப்டன் மில்லரை மிஞ்சி வசூல் வேட்டை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் அயலான் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்திருந்தது.
இரண்டாம் நாளில் 8.5 கோடி மற்றும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூல் செய்தது. மேலும் பொங்கல் பண்டிகையான நவம்பர் 15 ஆம் தேதி நான்காவது நாளில் 10 கோடி வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் அயலான் படம் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
அதேபோல், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால், வசூல் ரீதியாக வெற்றி பெற தவறிவிட்டதாக கூறப்படுகிறது. முதல் நாளில் 8.65 கோடி வசூல் செய்த கேப்டன் மில்லர் படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் குறைந்தது. இதனால் வசூல் ரீதியாக கேப்டன் மில்லர் பலத்த அடி வாங்கியது. நான்காவது நாள் முடிவில் 39.5 கோடி வசூல் செய்திருந்தது. விடுமுறை காலமும் முடிந்து விட்டதால், இனி தியேட்டரில் கூட்டத்தையும் எதிர்பார்க்க முடியாது.
எனவே, தனுஷின் கேப்டன் மில்லர் எதிர்பார்த்த வசூலை எட்டுமா என்று படக்குழுவினர் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ள தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் படம் செய்த வசூலை கூட எட்ட முடியாமல் திணறி வருகிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில், தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் இருப்பது தனுஷை மட்டுமின்றி படக்குழுவையும் சேர்த்து கலங்கடித்துள்ளது.
இவ்வாறு கேப்டன் மில்லர் படு தோல்வி அடைய காரணம் தனுஷின் நடவடிக்கைகள் என்றும் அதனால்தான் ரசிகர்கள் அவரையும் அவரது படத்தையும் புறக்கணித்து விட்டனர் என்றும் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் தனுஷ் இதுவரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
இத்தனைக்கும் தனுஷின் சகோதரிக்கு மெடிக்கல் சீட் வாங்குவதற்கு பக்க பலமாக இருந்தவரே விஜயகாந்த் தான். இப்படி ஓடோடி வந்து உதவி செய்த கேப்டனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாமல், கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “ராசாவே உன்ன காணாத நெஞ்சு” என்று பாட்டு பாடி படத்தை ப்ரொமோட் செய்ய முயற்சித்தார்.
இதனால் கொந்தளித்த ரசிகர்கள் தனுசை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த சூழலில் கேப்டன் மில்லர் வெளியாகவே, ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கேப்டன் மில்லர் படத்தை புறக்கணித்தனர். இதன் விளைவாகவே கேப்டன் மில்லர் வசூல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று சொல்லப்படுகிறது.