நண்பர் மனைவி என்று கூட பார்க்காமல்… நண்பனுக்கே தனுஷ் துரோகம் செய்யலாமா.?

0
Follow on Google News

பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸுக்கு சொந்தமாக சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகளை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவரது மனைவி பார்த்துள்ளார், ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என மார்ச் மாதம் விஜய் யேசுதாஸ் மனைவி புகார் கொடுத்தார்.

நடிகர் தனுஷ் உடன் நெருங்கிய நண்பரான விஜய் ஜேசுதாஸ் மிக நெருக்கமான குடும்ப நண்பர்களாக வலம் வந்தவர்கள், நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா என இந்த இரண்டு குடும்பமும் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.அப்படி இருக்கையில் இருவர் வீட்டிலும் அதிலும் லாக்கரில் இருந்த நகை ஒரே மாதிரியாக திருடு போய் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் திருடு போனதாக சொல்லப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது, லாக்கரும் உடைக்கப்படவில்லை. அந்த லாக்கர் பாஸ்வர்ட் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும் நிலையில். அது எப்படி இவர்கள் இருவருக்கும் தெரியாமல் நகைகள் காணமால் போகும் என தற்பொழுது சந்தேகம் வலுத்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, தனுஷ் குறித்து இதுவரை வெளிவராத ஒரு அதிர்ச்சியூட்டும் வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் மகன் பின்னனி பாடகர் விஜய் யேசுதாஸ் மற்றும் தனுஷ் இருவரும் நெருக்கிய நண்பர்கள், இவர்கள் நட்பு குடும்ப நட்பாக வளர்ந்து, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, அதே போன்று விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா என இவர்கள் இவர்களின் நட்பு மிக நெருக்கமானது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, இந்த படத்தின் வில்லனா நடித்த அமிட்டாஸ் பிரதான் என்கிற வில்லன் நடிகரின் கதாபாத்திரம் அப்போது பிரபலமாக பேசப்பட்டது, அந்த படத்தில் வில்லன் அமிட்டாஸ் பிரதானை அமூல் பேபி ..அமூல் பேபி என்று தனுஷ் அழைப்பர். அமிட்டாஸ் பிரதான் பார்க்க வில்லன் போன்று இல்லாமல் பெண்களுக்கு பிடித்த ஒரு மன்மதன் போன்று காட்சியளிப்பார்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகர் தனுஷ் உடன் நெருக்கிய நட்பில் இருந்த விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா படத்தின் படப்பிடிப்பை நேரில் காண விருப்பம் தெரிவித்துள்ளார், அதற்கு நடிகர் தனுஷ் ஏற்பாடும் செய்துள்ளார், தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை கான வந்த தர்ஷனா மற்றும் அந்த படத்தின் வில்லன் நடிகர் அமிட்டாஸ் பிரதான் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர்.

ஆனால் இவர்களின் நட்பு காதலாக உருவெடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர், இந்த விஷயம் தனுஷ் கவனத்துக்கு தெரிய வர, இருவருக்கும் மனம் ஒற்று போனால், சந்தோசமாக இருக்கட்டும் என, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனாவை அமிட்டாஸ் பிரதான் தள்ளிட்டு போக நடிகர் தனுஷ் பச்சை கொடி காட்டியுள்ளார், இதனை தொடர்ந்து அமிட்டாஸ் பிரதான் உடன் நாளடைவில் ஐக்கியமாகி விட்டார் தர்ஷனா.

இந்நிலையில் நண்பன் யேசுதாஸ் மனைவியை வேறு ஒருவன் தள்ளிட்டு போக துணையாக இருந்தவர் தனுஷ் தான் என பயில்வான் ரங்கநாதன் கடந்த வருடம் பேசிய வீடியோ ஓன்று தற்பொழுது விஜய் யேசுதாஸ் மனைவி நகை காணவில்லை என புகார் கொடுத்த நிலையில், பயில்வான் பேசிய இந்த பழைய வீடியோ ஓன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.