துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான தனுஷ் அடுத்தடுத்து, காதல் கொண்டேன், திருடா திருடி என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து முன்னனி நடிகரானார், இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த தனுஷ் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் ஒரு சில படங்கள் சுமாராகவும், ஒரு சில படங்கள் தோல்வியை தழுவினாலும் பிசி நடிகராகவே இருந்து வந்தார்.
தான் நடித்த படம் வெற்றியோ தோல்வியோ தனக்கு வரவேண்டிய சம்பளம் சரியாக தனக்கு வந்து சேர்ந்துள்ளதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது தனுஷ் சினிமா வாழ்கை, ஆனால் புதியதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி முதல் படமான 3 படத்தின் மூலம் தனது மனைவியை இயக்குனராக அறிமுகம் செய்து வைத்தார் தனுஷ் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதன் பின் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி படத்தை தவிர சுமார் 13 படங்கள் வசூல் ரீதியாக பெரும் நட்டம் ஏற்பட்டது, இதில் நடிகை அமலாபால் சினிமாவில் பெரியதாக சாதிக்க வேண்டும் என விரும்பிய தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் அம்மா கணக்கு என்கிற படத்தை அவருக்காக தயாரித்தார், அதே போன்று வெற்றிமாறன் விருப்பத்துக்காக விசாரணை, சிவகார்திகேயனுக்காக காக்கி சட்டை என அடுத்தவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பதாக நினைத்து பெரும் தொகையை சினிமாவில் இழந்தார்.
அது மட்டுமின்றி தனது மனைவியின் தங்கை சௌந்தர்யா சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதர்க்காக சௌந்தர்யா இயக்கத்தில் VIP 2 படத்தை தயாரித்து பணத்தை இழந்தார். இது போன்று மற்றவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பதாக நினைத்து தன்னிடம் உள்ள பணத்தை இழந்து தன்னுடைய வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு சென்றார், இந்த நெருக்கடியான சூழலில் தான் தனது மனைவி மூலம் மாமனார் உதவியை நாடியுள்ளார் தனுஷ்.
தனுஷ் கஷ்டம் அறிந்த மாமனார் ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் தனுஷ் தயாரிப்பில் உருவான காலா படத்தில் நடித்து மருமகனுக்கு உதவி கரம் நீட்டியுள்ளார், பின் பொருளாதாரத்தில் ஒரு அளவு தன்னை நிலை நிறுத்தி கொண்ட தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார். ஆனால் நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்பொழுது மீண்டும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தூசி தட்டி படம் தயாரிக்க தொடங்கியுள்ளார் தனுஷ்.