நீங்க என்ன எனக்கு ரெட் கார்டு போடுறது… நானே வெளியேறுகிறேன்… தமிழ் சினிமாவுக்கு குட் பை சொன்ன தனுஷ்…

0
Follow on Google News

தனது அசாத்தியமான நடிப்பு திறமையால், எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அசால்டாக நடித்து சம்பவம் செய்யும் நடிகர் தனுஷுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. முதலில் தமிழில் மட்டுமே நடித்து வந்த நடிகர் தனுஷ், தற்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என, கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் தற்போது பாலிவுட் போதாது என நடிகர் தனுஷ் ஹாலிவுட்க்கு ஜம்ப் ஆகியிருக்கிறார். அதுவும் அவெஞ்சர்ஸ் படத்தின் முக்கியமான ரோலில் தனுஷ் நடிப்பதால் ரசிகர்கள் ஒரு பக்கம் குஷியில் இருந்தாலும், தமிழ் தயாரிப்பாளர்கள் மறு பக்கம் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏனெனில், நடிகர் தனுஷுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் வழங்கியுள்ளது.

மேலும் நடிகர் தனுசை வைத்து இனி எந்த தயாரிப்பாளர்களும் புது படத்தை இயக்கக் கூடாது என உத்தரவிட்டது. நடிகர் தனுஷ் போயஸ்காட்டனில் வீடு கட்டும் போது பல நெருக்கடி ஏற்பட்டதால், தானாக சென்று கிட்டத்தட்ட ஐந்து தயாரிப்பாளர்களிடம், நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன், அதோடு மொத்தமாக மூன்று நான்கு படத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என கூறி, ஒரு பெரிய தொகையை லம்ப்பாக வாங்கியிருக்கிறார்.

ஆனால் அந்த பணத்தையும் நடிகர் தனுஷ் இன்று வரை திருப்பிக் கொடுக்கவில்லை. அதேபோல் அவர்கள் படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட்டும் இன்று வரை கொடுக்கவில்லை. இதனால் பொங்கி எழுந்த தயாரிப்பாளர்கள், தனுஷ், தமிழ் திரைப்படத்தில் நடிக்க முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில்தான் தமிழ் திரைப்படத்தில் தான நடிக்க கூடாது என்று, நடிகர் தனுஷ் பாலிவுட் கூட இல்லை, ஹாலிவுட்டுக்கே ஜம்ப் ஆகி இருக்கிறார்.

மார்வெல் ஸ்டூடியோஸின் படைப்பாக உலக அளவில் பிரபலமான அவெஞ்சர்ஸ் படத்திலிருந்து, அடுத்ததாக அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படம் உருவாகிறது. இதனை ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்குகிறார்கள். இந்தப் படத்தில் தனுஷுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான தி க்ரே மேன் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சிறிய காட்சி என்றாலும் தனுஷின் நடிப்பை படக்குழுவினர் உட்பட அனைவரும் பாராட்டி இருந்தார்கள். நெட்ப்ளிக்ஸில் நேரடியாக வெளியான இந்த படத்தில் தனுஷ் நடித்திருப்பதால் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சில காட்சிகள் மட்டுமே தனுஷ் வந்தது சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் உலக அளவில் தி க்ரே மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதுபற்றி பேசிய இயக்குனர்கள் தனுஷின் கதாபாத்திரத்தை மட்டும் டெவலப் செய்து தனியாக ஒரு படம் இயக்கும் எண்ணம் உள்ளதாக ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்குனர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான் தற்போது, மார்வெல் தயாரிப்பில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ரூஸோ பிரதர்ஸ் இயக்கவிருக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக, சமீபத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.