தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு இருவரும் தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தாலும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறுவதற்கான ஐஸ்வர்யா – தனுஷ் இரு தரப்பிலும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில். மாதம் நடைபெற்ற ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதியரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும் பிரிந்த ஐஸ்வர்யா- தனுஷ் தம்பதியினரை மீண்டும் இணைத்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் நடத்திய பேச்சு வார்த்தை சுமூக முடிவு எட்டியது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து விரைவில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்பொழுது வரை குழந்தைகள் ஆசைக்காக மீண்டும் மனைவியுடன் இணைய தனுஷ் விருப்பம் தெரிந்தாலும். முழு மனதாக மனைவி ஐஸ்வர்யாவை ஏற்றுக் கொள்வதற்கு அவருக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட இரண்டு மகன்களும் தனுசை அழைத்த போது அதற்கு தனுஷ் வர மறுத்துள்ளார். இதனால் தனுஷ் இல்லாத முதல் தீபாவளியை தாத்தா ரஜினிகாந்த், அம்மா ஐஸ்வர்யா உடன் கோலாகலமாக கொண்டாடினார்கள் தனுஷ் இரண்டு மகன்கள்.