ரெடின் கிங்ஸ்ஸி மனைவிக்கு இது இரண்டாவது திருமணமா? வெளியான பரபரப்பு…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். . ஆனால், இவர் பல வருடங்கள் முன்பே சினிமாவில் கால்பதித்திருக்க வேண்டியவர். அதுவும் நெல்சன் மூலமாகவே நிகழ இருந்தது.

நெல்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், ரெடின் கிங்ஸ்லி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் 2010-ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை நெல்சன் தொடங்கினார். இதில் ரெடினும் நடித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படம் பாதியிலேயே டிராப் ஆனது. மேலும், நெல்சனை போல் ரெடினுக்கும் திரைத்துறை அறிமுகம் தள்ளிப்போனது.

பின் ஏழு வருட போராட்டத்துக்கு பிறகு, ‘கோலமாவு கோகிலா’ மூலம் மீண்டும் நெல்சன், ரெடின் இருவரும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்தார். மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்த நிலையில், இதில் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம்.

இந்த நிலையில், சீரியல் நடிகையான சங்கீதாவுடன் ரெடின் கிங்ஸ்லிக்கு டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரெடின் கிங்ஸ்லிக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சீரியல்கள் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை சங்கீதா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 2021ல் லோலேஷ் கனகராஜ் இயக்கியிருந்த மாஸ்டர் படத்தை உதாரணமாகக் கூறலாம். சங்கீதா- ரெடின் கிங்ஸ்லி தம்பதிகள் இருவரும் திருமணத்தை கொண்டாடி வரும் நிலையில் சங்கீதா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில், சங்கீதா 2009 கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாகவும் தகவல் வெளியானது. தற்போது 45 வயதாகும் சங்கீதாவுக்கு ஷிவ்ஹியா என்ற மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்த நடிகை சங்கீதா தற்பொழுது பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகர் ரெடின்னுக்கு இப்பொது 46 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லின் மனைவியும் நடிகையுமான சங்கீதா அளித்துள்ள பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், செய்தியாளர் பாய்பிரண்ட் பற்றி கேள்வி கேட்க, வெட்கத்துடன் பதில் அளித்த சங்கீதா, அவர் அமைதியானவர், அதே நேரம் ரொம்ப பாசமானவர். அவர் முன் குழந்தை மாதிரி மாறிவிடுவேன். என்னை கண்ட்ரோல் பண்ணி பார்த்துக்கொள்வதுதான் அவர் வேலை என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் சங்கீதா பாய் பிரண்டுனு சொன்னது ரெடின் கிங்ஸ்லியைத்தானே என்று கேட்டு வருகின்றனர்.