ஐடி துறையில் சாதிக்கும் அரவிந்த் சாமி… ரெவின்யூ மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா.?

0
Follow on Google News

ஆசிய அளவில் ஸ்டீல் ஏற்றுமதி தொழிலில் ஆசியா அளவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தவர் அரவிந்த்சாமியின் தந்தை, அரவிந்த்சாமியின் தாயார் பரதநாட்டிய கலைஞர் மிகப்பெரிய கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மகன் அரவிந்த் சாமியை மிக எளிமையாகவே வளர்த்துள்ளார் அவருடைய தந்தை, பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் பொழுதும் அவருக்கான பாக்கெட் மணி மிகக் குறைந்த அளவே வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தனக்கு பாக்கெட் மணி பத்தவில்லை என்பதால் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே மாடலிங் துறைக்கு சென்று சிறு சிறு விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அரவிந்த்சாமி. அப்படி விளம்பரப் படங்களில் நடித்த அரவிந்த்சாமி மணிரத்தினம் கண்ணில் பட, தளபதி படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்தது, அரவிந்த் சாமிக்கு சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும், ஹீரோவாக வேண்டும் என்கின்ற எண்ணமெல்லாம் கிடையாது.

மணிரத்தினம் படத்தில் ஒரு நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, அதை பயன்படுத்திக் கொள்வோம் என்பது தான். தளபதி படத்தை முடித்துவிட்டு தந்தையின் விருப்பப்படி வெளிநாடுகளுக்கு படிக்க சென்று விடுகிறார் அரவிந்த்சாமி. ஆனால் தன்னுடைய 23 வயதில் உடல்நல குறைவினால் தாயும் தந்தையும் இழந்து விடுகிறார் அரவிந்த் சாமி.

தாய் தந்தையை இழந்த பெரும் சோகத்தில் இருந்த அரவிந்த்சாமி, அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்கு சினிமா பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்புகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்த படங்கள் தொடர் வெற்றியை கொடுத்து, அவருக்கென குறிப்பாக அதிக பெண்கள் ரசிகர்கள் அரவிந்த் சாமிக்கு உருவாக்கியது.

அரவிந்த்சாமி சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய தந்தை உருவாக்கி வைத்த தொழிலை தொடர்ந்து கவனித்து கொண்டே வந்துள்ளார். ஒரு கட்டத்தில் போதும் சினிமா என முடிவு செய்து, முழுநேரம் தொழில், குடும்பம் என செட்டிலாகி விடுகிறார் அரவிந்த்சாமி. அப்படி சினிமாவை விட்டு விலகிய அடுத்த இரண்டு வருடத்தில் அரவிந்த் சாமியின் 3 வயது குழந்தை, மற்றும் 7 வயது குழந்தையை அரவித்சாமியிடம் ஒப்படைத்து விட்டு அவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து விடுகிறார்.

தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஒரு தாய் எப்படி கவனித்துக் கொள்வாரோ.? அந்த குழந்தைகளுக்கு சமையல் செய்து கொடுப்பதில், இருந்து குளிக்க வைப்பது வரை என தந்தையாக தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த்சாமி, இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு விபத்து அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது, இதனால் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட அரவிந்த்சாமி சில காலம் அவரால் எழுந்து நடக்க முடியாமல் வீல்சேர் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

அடுத்த சில வருடங்களில் மீண்டும் உடல் நலம் பெற்று பழைய அரவிந்த்சாமியாக வருகிறார், இரண்டாவது திருமணமும் செய்து கொள்கிறார் அரவிந்த் சாமி, நீண்ட வருட இடைவேளைக்கு பின்பு மணிரத்தினம் இயக்கத்தில் கடல் படத்தில் ரீ – என்ட்ரி கொடுக்கிறார் அரவிந்த் சாமி, அடுத்தடுத்து வில்லனாக தொடர்ந்து வெற்றி படமாக அரவிந்த் சாமிக்கு அமைகிறது.

இந்நிலையில் அரவிந்த் சாமி வாழ்க்கையில் சினிமா, விபத்து மனைவியை விட்டு பிரிதல், என பல கட்டங்களை கடந்து வந்தாலும் அவருடைய பிசினஸை எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர் விடவே இல்லை, அந்த வகையில் அவருக்கு சொந்தமான ஒரு ஐடி நிறுவனம் 3300 கோடி ரெவென்யு என சில ஆங்கில பத்திரிகைகளில் செய்தி வெளியாகி சினிமா துறையில் இருப்பவர்கள் பலரை வாய் பிளக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.