அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா2 படத்தின் ரிலீஸ் என்று அல்லு அர்ஜுன் கொண்டாட முடியாத அளவிற்கு ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 வெளியிடும் ஒரு திரையரங்கிற்கு ரசிகர்களோடு ரசிகரா படம் பார்க்க வந்திருக்கிறார். அல்லு அர்ஜுனை பார்த்த திரையரங்குகளில் கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் அவரை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடி வருகிறார்கள்,
அப்போது அந்த திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த ஒரு தாய் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். அதாவது அல்லு அர்ஜுனை நோக்கி ஓடிய அந்த மொத்த கூட்டமும் அந்த தாய் கீழே விழுந்தது கூட தெரியாமல் மேலே ஏறி மிதிச்சு நசுக்கி ஓடி இருக்கிறார்கள். அப்படி ஓடியதில் அந்த தாய் பலியாகி உள்ளார். மேலும் அந்தத் தாயுடன் கூட வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது குழந்தைகளில் ஒரு குழந்தை தீவிராக சிகிச்சையில் மிகவும் சீரியசான கண்டிஷனில் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலைமை அல்லு அர்ஜுன் தன்னுடைய புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த போது அரங்கேறி உள்ளது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு கூட்டத்தில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் அந்தப் படத்தை முதல் நாள் அந்த தாய் பார்க்கச் சென்றது தவறு என்று சில விமர்சனம் செய்து வரும் நிலையில், இதில் மிகப்பெரிய தவறு அல்லு அர்ஜுன் மீதும் உள்ளது என்று சுட்டி காட்டுகிறார்கள்.
பெரும் கூட்டம் திரையரங்கு முன்பு கூடி இருக்கும் பொழுது அல்லு அர்ஜுன் வந்து அந்த படத்தை பார்க்கவில்லை என்றால் என்ன கேடு என்று தங்களுடைய கோபத்தை பலரும் வெளிப்படுத்துவார்கள், அந்தப் படத்தை அவருடைய வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்த்திருக்கலாம். காரணம் அவர் வீட்டிலேயே நிச்சயம் தியேட்டர் இருந்து இருக்கும். அப்படித்தான் பல நடிகர்கள் படத்தின் கேடிஎம் வாங்கி அவரவர் வீட்டிலே பார்த்துக் கொள்வார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ரசிகர்களோடு பார்க்க சென்றால் கட்டுக்கடங்காத கூட்டத்தால் இது மாதிரி ஏதாவது ஒரு விபரீதம் நடக்கும் என்றுதான் அவர்கள் வீட்டிலே படம் பார்த்துக் கொள்வார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அல்லு அர்ஜுன் தன்னுடைய ரசிகர்கள் திரையரங்குகளில் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும் ஆசையில் வந்திருக்கிறார். ஆனால் அப்படி வருவது தப்பு இல்லை நடிகர் ரஜினிகாந்த் ஃபார்முலாவை பின்பற்றி வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் திரையரங்களின் நடந்திருக்காது என்பதுதான் உண்மை.
காரணம் நடிகர் ரஜினிகாந்த் இதுபோன்று தன்னுடைய படத்தை ரசிகர்கள் எப்படி திரையரங்குகளில் கொண்டாடுகிறார்கள் என்று பார்க்க விரும்பினால், அவர் திரையரங்குக்கு ரஜினியாக செல்ல மாட்டார். அவர் பல படங்களை கர்நாடகாவில் திரையரங்குகளில் பார்த்திருக்கிறார், குறிப்பாக அவர் இரவு காட்சிக்கு தான் செல்வார், செல்லும்போது யாருமே தன்னை கண்டுபிடிக்க முடியாதபடி மாறு வேடத்தில் சென்று தன்னுடைய படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று அந்த படத்தை பார்த்துக் கொண்டேன் ரசிப்பார்.
ஆனால் ஒருமுறை கூட ரஜினிகாந்த் அனைவருக்கும் தெரிந்த படி எந்த ஒரு திரையரங்குகளில் சென்று படம் பார்க்கவில்லை, இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் திரையரங்குகளில் படம் பார்க்க வந்தால் விபரீதம் ஏற்படும் என்பதை உணர்ந்தவர் ரஜினிகாந்த், அதேபோன்று ரஜினி கந்தை பின்பற்றி அல்லு அர்ஜுன் மாறுவேடத்தில் சென்று இந்த படத்தை பார்த்திருக்க வேண்டும், அப்படி சென்று இருந்தால் இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடைபெற்று இருக்காது என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.