தெலுங்கு சினிமாவை மிக உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் பாகுபலி, சுமார் 1000 கோடி வசூல் சாதனை படைத்த பாகுபலிக்கு, பின்பு வந்த ட்ரிபிள் ஆர் திரைப்படம் தேசிய விருது பெற்றது, அதனைத் தொடர்ந்து அடுத்து வந்த அல்லு அர்ஜுனா நடிப்பில் புஷ்பா பார்ட் 1 வெளியாவதற்கு முன்பே பாகுபலி ட்ரிபிள் ஆர் போன்று மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அந்த படத்தில் ப்ரோமோஷன்காக பல யுக்திகளை கையாண்டது பட குழுவினர்.
அந்த வகையில் புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் பேன் இந்தியா ஸ்டாராக வேண்டும் என்றால், புஷ்பா படம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழி பேசக்கூடிய மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும், அப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் கிரிக்கெட் வீரர்கள் தான் சரியான தேர்வு, என கிரிக்கெட் வீரர்கள் சடேஜா, விராட் கோலி போன்றவர்கள் புஷ்பா போன்று செய்கை காட்டி அதை புரமோஷன் செய்தார்கள்.
இதற்காக திரை மறைவில் சடேஜா மற்றும் விராட் கோலி இருவருக்கும் புஷ்பா படக்குழு தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி பல யுக்திகளை கையாண்டு புஷ்பா 1 வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அந்தப் படத்தில் இடம் ஓ சொல்கிறாயா மாமா ஓர் சொல்றியா இந்திய அளவில் பிரபலமானது. அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்து தற்பொழுது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார் புஷ்பா 2 ஆயிரம் கோடிய வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்த படம் இப்படி ஆயிரம் கோடி தாண்டி வசூல் சாதனை படைப்பதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டது அம்பலம் ஆகியுள்ளது. அதாவது படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூல் படைக்க வேண்டும் என்பதற்காக ஒரே நாளில் தொடர்ந்து பல ஷோக்கள் திரையிட வேண்டும். மேலும் படம் டிசம்பர் 5ல் வெளி ஆவதற்கு முதல் நாள் டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஸ்பெஷல் காட்சிகள் எல்லாம் போட வேண்டும் என்று முடிவு செய்தது பட குழு.
இதற்கு அந்த மாநில அரசாங்கமும் அனுமதி அளித்தது,மேலும் புஷ்பா 2 படத்திற்கான டிக்கெட்டை இஷ்டத்திற்கு 1500, 2000 ரூபாய் என திரையரங்குகள் விற்பனை செய்தது. இதற்கெல்லாம் அந்த மாநில அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள சந்தியா திரையரங்குகளில் புஷ்பா 2 படம் பார்ப்பதற்காக 39 வயது மதிக்கத்தக்க ரேவதி அவருடைய குடும்பத்தினருடன் வந்தார்.
இவர் அல்லு அர்ஜுனாவின் மிக தீவிர ரசிகையாவார். அப்போது அந்தத் திரையரங்குக்கு திடீரென்று அல்லு அர்ஜுன் என்ட்ரி கொடுத்த நிலையில், கூட்ட நெரிசலில் ரேவதி என்பவர் பலியானார், அவருடைய மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் வெடித்து. அல்லு அர்ஜுன் மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில் அல்லு அர்ஜுன் உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவதாக அறிவித்தார்.
ஆனால் அவருடைய கணவர் எனக்கு 25 லட்சம் முக்கியமல்ல என்னுடைய கல்லீரல் பாதிக்கப்பட்ட போது என்னுடைய மனைவி அவருடைய ஒரு கல்லீரலை எனக்கு கொடுத்து என் உயிரை காப்பாற்றியவர். என் மனைவி உயிர் பிரிந்ததற்கு நீதி வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் ரேவதியின் கணவர். இதனைத் தொடர்ந்து திரையரங்கு ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இடைக்கால ஜாமீன் பெற்று திரும்பியுள்ளார். அல்லு அர்ஜுன் கைது கூட படத்திற்கான புரொமோஷன் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.