நடிகர் அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பக்கட்டத்திலே, தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் இவனுக்கு அளித்தார்,இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் புதிய படத்திற்கான திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்த விக்னேஷ் சிவன். அந்த படத்திற்கான லொகேஷன் தேர்வையும் செய்து முடித்தார்.
மேலும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கால் சீட்டும் பெற்றார் விக்னேஷ் சிவன். இதே நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், மீண்டும் ஒருமுறை முழு கதையும் கேட்டு எனக்கு கதை பிடிக்கவில்லை, இதில் என்னால் நடிக்க முடியாது என மறுத்து விட்டார் அஜித்.
படத்தில் கமிட்டாவதற்கு முன்பே கதையை கேட்டுவிட்டு தான் விக்னேஷ் சிவனை ஓகே செய்துள்ளார் அஜித், ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் இந்த நேரத்தில் அஜித் படம் பிடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டவுடன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இந்த படத்திற்காக உழைத்த விக்னேஷ் சிவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார். மேலும் அஜித்தை எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்தும் அதற்கு அஜித் உடன்படவில்லை.
இந்த நிலையில் ஏற்கனவே விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி அஜித் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் சென்னையில் உள்ள மிகப்பெரிய தனியார் நட்சத்திர ஹோட்டலில் மிக தீவிரமாக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மகிழ்திருமேனி.அவ்வப்போது அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு அஜித் தனியாக சென்று ஸ்கிரிப்ட் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அஜித் புதிய படத்தில் இருந்து வெளியேற்றது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதும், உடனே டென்ஷனான விக்னேஷ் சிவன் இது தேவையில்லாத கேள்வி வேறே கேள்வி இருந்தா கேளுங்க என திட்டியுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிட்டத்தக்கது.