பொதுவாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோரின் மகன்களை வாரிசு நடிகர்களாக சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கும் முக்கிய பிரபலங்கள் யாரும் தங்களுடைய மகளை சினிமா துறையில் அறிமுகம் செய்ய விரும்ப மாட்டார்கள்.அவர்கள் இதற்கு காரணம் சினிமா துறையை நன்கு அறிந்தவர்கள் என்பதால் தான் என்பது குறிப்பிடதக்கது.
அந்த வகையில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சினிமாவில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த போது, அதற்கு மறுப்பு தெரிவித்தவர் அவருடைய தந்தை சரத்குமார், தன்னுடைய மகளின் மனதை மாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார் சரத்குமார். வெவ்வேறு துறையில் மகளின் கவனத்தை திசை திருப்ப மற்றொரு துறையில் கவனத்தை திசை திருப்பு அதன் சார்ந்த துறை குறித்து மகளை ஈடுபாடு செய்ய வைத்தார்.
இருந்தும் தந்தை விருப்பத்திற்கு எதிராக சினிமாவில் நடிகையானார் வரலக்ஷ்மி. அதேபோன்று இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்த போது, திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அவருடைய தந்தை சங்கர் இருந்தும். இருந்தும் நடிகையாக நடிக்க வேண்டும் என அதிதி சங்கர் பிடிவாதம் பிடிக்க, அதற்கு மருத்துவம் படித்து முடித்த பின்பு உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என தெரிவித்து விட்டார்.
மருத்துவம் படிக்கும் தனது மகள் மருத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டு சினிமா மீது இருந்த ஆசையை கைவிட்டு விடுவார் என்கின்ற எதிர்பார்ப்பில் தான் சங்கர் அவ்வாறு செய்தார். ஆனால் மருத்துவம் படித்து முடித்த சங்க மகள் அதிதி சங்கர் நீங்கள் சொன்ன மாதிரி மருத்துவம் பட்டப்படிப்பை படித்து முடித்தேன். இப்போது என்னுடைய நடிகையாகும் ஆசையை நிறைவேற்றுங்கள் என தந்தையை போட்டு நச்சரிக்க வேறு வழி இன்றி சங்கரும் மகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் சங்கர்.
இந்த வரிசையில் நடிகர் அஜித் குமாரின் மகள் அனுஷ்கா குமார் சினிமா மீது மோகம் கொண்டு நடிகையாக நடிக்கும் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் மற்றும் மனைவி ஷாலினி இருவருமே சினிமா துறையைச் சார்ந்தவர்கள் என்பதால், இயற்கையாகவே இந்த தம்பதியரின் வாரிசுகளுக்கு சினிமா ரத்தம் உடலில் ஊறிப் போய் இருக்கும். ஆனால் அஜித் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார்.
மேலும் அவருடைய குடும்பத்தினர் அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவார்கள். அந்த வகையில் ஷாலினியை திருமணம் செய்து கொண்ட அஜித், திருமணத்தில் பின்பு மனைவி சினிமா துறையில் தலையே காட்டக்கூடாது என்கிற அஜித் விருப்பத்திற்காக சினிமா பக்கமே ஷாலினி வரவில்லை. பிரபல சினிமா நடிகரின் மனைவிகள் பொது நிகழ்ச்சிக்கு வருவது போன்று கூட ஷாலினியை அனுமதிக்கவில்லை அஜித்.
அஜித் விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஷாலினியும் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். அந்த வகையில் அஜித் விருப்பத்திற்கு எதிராக அவருடைய மகள் அனுஷ்கா சினிமாவில் நடிப்பதற்கு சாத்தியம் இல்லை. அதற்கு அஜித் மனைவி ஷாலினி கூட அனுமதிக்க மாட்டார் என்கின்றனர் அஜித் குறித்து நன்கு அறிந்தவர்கள்.