அஜித்தின் நடவடிக்கைகள்… செம்ம டென்ஷனில் விஜயகாந்த்… இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்…

0
Follow on Google News

நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று, கடனிலிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்த பெருமை விஜயகாந்தையே சேரும். கேப்டனின் மரணம் அவரது குடும்பத்தை மட்டும் இன்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஷூட்டிங்கில் லைட் மேன் முதல் மிகப்பெரிய ஹீரோ வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு தான் பரிமாற வேண்டும் என்று தன்னுடைய சொந்த செலவிலேயே அனைவருக்கும் உணவிட்டு மகிழ்ந்தவர் விஜயகாந்த். ஷூட்டிங்கில் மட்டுமின்றி ஏராளமான ஏழை எளிய மக்களுக்கும் உணவிட்டு பசியை தீர்த்து மகிழ்ந்த சம்பவங்கள் பல உண்டு.

நடிகர் விஜயகாந்த் அவர்களால் ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி மிகப்பெரிய ஹீரோக்களும் பலனடைந்துள்ளனர். ஆம் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் வளர்ச்சிக்கு கூட விஜயகாந்த் உதவி இருக்கிறார். மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமின்றி தன்னுடன் பணிபுரிந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் களுக்கும் ஏகப்பட்ட உதவிகளை வாரி வழங்கி உள்ளார்.

இத்தகைய நல் உள்ளம் கொண்ட விஜயகாந்தின் மறைவிற்கு விஜய் போன்ற நடிகர்கள் நன்றி மறவாமல் விசுவாசத்தோடு ஓடோடி வந்து நேரில் வருகின்ற அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் அஜித், கேப்டன் மறைந்த போதும் அஞ்சலி செலுத்த செல்லவில்லை, இன்று வரை கேப்டனின் நினைவிடத்திற்கு செல்லவும் இல்லை. ஆனால் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவிற்கு மட்டும் ஓடோடி சென்றார்.

இதனால் இணையவாசிகள் பலரும் கேப்டனுக்கு மட்டும் அஜித் இன்று வரை அஞ்சலி செலுத்தாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் விஜயகாந்த்- அஜித் பற்றிய விவகாரம் குறித்து தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அஜித் கொஞ்சம் ஈகோ பிடிச்ச நபர் தான். இத்தனை பேர் சொல்லி நாம் செல்ல வேண்டுமா என்று கூட அஜித் நினைத்திருக்கலாம், அதனாலேயே இன்று வரை விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்லாமல் இருந்திருக்கலாம். இதனிடையே, நான் கடவுள் படத்தின் பிரச்சனையின் போது அஜித்துக்கு விஜயகாந்த் உதவவில்லை என்று பேசப்பட்டு வருகிறது.

ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. உண்மையில் நடிகர் அஜித்தை பார்த்து விஜயகாந்த் வியந்த சம்பவமும் உண்டு. அதாவது நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு சிங்கப்பூர் மலேசியா என்ற வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்கலாம் என்று அஜித்திடம் கேட்டபோது, நடிகர் அஜித் அளித்த பதில் விஜயகாந்த் ஆச்சரியப்பட செய்துள்ளது.

அதாவது நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு நாம் ஏன் அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தாலே கடனை அடைத்து விடலாம்” என்று சொல்லி இருக்கிறார் . அதுமட்டுமில்லாமல் தனது பங்காக 10 லட்சம் ரூபாயை விஜயகாந்திடம் கொடுத்துவிட்டு கிளம்பி இருக்கிறார். அஜித்தின் இந்த செயல் விஜயகாந்த் மிகவும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ” நடிகர் அஜித் என்னை மாதிரியே இருக்காருப்பா” என்றும் அங்கிருந்தவர்களிடம் கேப்டன் கூறியதாக அந்த மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.