இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் அஜித்… ராணுவத்தில் அஜித்தின் பங்கு…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்க கூடிய விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவருக்கு போட்டியாளராக சினிமாவில் இருக்க கூடிய நடிகர் அஜித்தின் செயல்பாடுகள், அவரை பின்பற்றும் ரசிகர்களை, நாங்கள் தல ரசிகர்கள் என நெஞ்சை நிமிர்த்து சொல்லும் அளவுக்கு பெருமை சேர்ந்துள்ளது அஜித்தின் செயல்பாடுகள்.

ரசிகர் மன்றங்களை கழித்துவிட்டு, அஜித் குமாரோ தனக்கென்று ஒரு தனித்துவமான பாதை ஒன்றை தேர்ந்தெடுத்து பயணித்து வரும் நிலையில், சினிமாவில் பைக் மற்றும் கார் ஸ்டண்ட்களில் கலக்கும் அஜித்திற்கு, பைக் மற்றும் கார்கள் மீது அலாதியான ஆர்வம் உண்டு என்பது நம்மில் பலருக்கு தெரியும். அனால் அவரின் ஆர்சி எனப்படும் ரிமோட் கண்ட்ரோலிங் வாகனங்கள் மீதான ஆர்வம் பற்றி தெரியுமா.?

அஜித்திற்கு சிறிய வகை ஜெட்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவைகளை வடிவமைத்து, அதை பறக்க விடுவதில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆர்வம் மட்டுமல்ல அஜித் அதில் ஒரு கில்லாடியும் கூட. அதுமட்டுமின்றி அஜித்திடம் விமான ஓட்டிக்கான உரிமம் உள்ளது. விமானம் ஓட்டும் உரிமம் கொண்டுள்ள ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டும் தான் என்றும் கூறப்படுகிது.

பள்ளி பருவத்தில் இருந்தே ஏரோ-மாடலிங்கில் ஆர்வம் காட்டிய அஜித் குமார், நடிகரான பின்பும் கூட ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைப்பதும், அதை செயல்படுவத்துவதுமாய் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டே வருகிறார். அந்த ஆர்வம் மற்றும் வளர்ச்சி தான் அஜித்தை ஒரு ‘யுஏவி சிஸ்டம் அட்வைசர்’ ஆக மாற்றியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அஜித் குமாருக்கான இந்த நியமனத்தை வழங்கியது.

பல கோடிகள் சம்பளம் வாங்கும் அஜித்திற்கு, இந்த ப்ராஜெக்ட் வழியாக ஒவ்வொரு வருகைக்கும் கிடைக்கும் சம்பளம் ரூ.1000/- ஆகும். அதையும் வாங்கிக்கொள்ளாமல் எம்ஐடியின் ஏழை மாணவர்களின் கல்விக்காக அதை நன்கொடையாக அளித்து வருகிறார். சென்னையில் உள்ள ஆர்சிபிஏ (RCPA) ஏர் ஃபீல்ட்டில் நம்ம அஜித் அடிக்கடி தன் சிறிய வகை விமானங்களின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்துவார்.

ஆர்சிபிஏ(RCPA) ஏர் ஃபீல்ட் தளத்தின் நிர்வாகிகளில் நம்ம அஜித்தும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் கே.அரவிந்த் (ரோட்டார் ஸ்போர்ட்) ஆவார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கும் நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கிறார்.

இந்த தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெறும் ட்ரோன் போட்டியில் பங்கெடுத்து, அசால்டாக வெற்றியும் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அளவில் ட்ரோன் தயாரிப்பில் பங்களிப்பும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனமானது இந்திய ராணுவத்திற்கு 200 ஆளில்லா விமானங்களை தயாரிக்க தேர்வாகியுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் 165 கோடி ரூபாய் ஆகும். இதற்கு அஜித் ஆலோசகராக வழிகாட்டுவார்.

இதற்கிடையே தற்போது நார்வே நாட்டில் பைக்கில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அஜித் பைக் ரைடு சென்றுள்ள இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அஜித் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே துவங்கவிருந்தது.

ஆனால், சில காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்காமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வரும் நிலையில், தற்பொழுது இந்திய ராணுவத்திற்கு 200 ஆளில்லா விமானங்களை தயாரிக்க அஜித் ஆலோசகராக வழிகாட்டுவார் என்கிற செய்தி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.