விடாமுயற்சியின் டீசர் யாருமே எதிர்பாராத விதமாக எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி திடீரென்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் பின்னணியில் அஜித் மற்ற நடிகர்கள் போன்று தன்னுடைய ரசிகர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன.? நமக்குத் தேவை வருமானம் தான் என்று நினைக்காமல், தன்னுடைய ரசிகர்கள் தன்னால் எந்த விதத்திலும் அவர்களுடைய பணத்தை இழக்கக்கூடாது.
குறிப்பாக எனக்காக நேரம் செலவழித்து அவர்கள் குடும்பத்தை பார்க்காமல் விட்டு விடக்கூடாது என்பதில் அஜித் உறுதியாக இருக்கக் கூடியவர். அந்த வகையில் ஒரு டீசர் வெளியீட்டு விழாவை முன்கூட்டியே அறிவித்து. இந்த தேதி இத்தனை மணிக்கு டீசர் வருகிறது என்று சொன்னால், ரசிகர்கள் பலரும் அன்று வேலை வெட்டிக்கு கூட போகாமல் அஜித்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
அதெல்லாம் நடக்கக்கூடாது. குறிப்பாக முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களின் டீசர் ட்ரெய்லர் வெளியிடுவதை முன்கூட்டியே அறிவித்து, அந்த டீசர் டிரைலரை திரையரங்குகளில் ஒளிபரப்பி அதையும் காசு பார்க்கும் வேலையும் நடந்து வருகிறது. இது அந்தந்த ரசிகர்களிடம் இருந்து பறிக்கப்படும் பணம்தான். அப்படியெல்லாம் தன்னுடைய ரசிகர்களிடமிருந்து பணம் பறிபோய் விடக்கூடாது என்பதால் தான் திடீரென்று 11 : 08 க்கு டீசர் வெளியாகிறது என்று அறிவிப்புடன் விடாமுயற்சியின் டீசர் வெளியாகி பெரும் அளவில் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், என்னுடைய படம் வருது. பார்த்து ரசிங்கள், பிடித்திருந்தால் கொண்டாடுங்கள், மற்றபடி எந்த ஒரு பரபரப்பும் தேவையில்லை என அஜித்தின் இந்த நிலைபாடு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் விடாமுயற்சி டீசர் இந்தியாவே வாயைப் பிளந்து பார்க்கும், 2000 கோடி இந்த படம் வசூல் செய்து சாதனை படைக்கும் என்றெல்லாம் பில்டப் கொடுக்காமல் சத்தமே இல்லாமல் வந்துள்ள விடாமுயற்சி டீசர், ஹாலிவுட் தரத்திற்கு உள்ளதாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
உண்மையிலேயே அஜித் ஒரு ஹாலிவுட் நடிகர் தான் என்று சினிமா விமர்சனங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள், காரணம் மொத்த சினிமா துறையைச் சார்ந்த நடிகர்கள் எல்லாம் ஒரு வரிசையில் நின்றால் அஜித் மட்டும் தனியாக தெரிவார். அஜித்தின் ஸ்டைல்,அவருடைய கலர், பாடி லாங்குவேஜ் அனைத்துமே ஒரு ஹாலிவுட் நடிகருக்கு இணையாக தான் இருக்கும்.
அந்த வகையில் தான் ஹாலிவுட் தரத்தோடு விடாமுயற்சி படம் எடுத்துள்ளதற்கு ஒரு ஹாலிவுட் தரத்துடன் அஜித் ஒத்துப் போவதை பார்க்க முடிகிறது. இந்த படத்தில் வேறு எந்த ஒரு நடிகரும் இருந்தாலும், அது இந்த படத்திற்கு ஏற்றதாக இருக்காது. மேலும் விடாமுயற்சி படத்தின் டீசரில் எந்த இடத்திலும் கூச்சலே இல்லாமல் முழுக்க முழுக்க எந்த ஒரு பில்டப் இல்லாமல் கேஷுவலா மிக பிரம்மாண்டமாக பார்ப்பவர்களை பிரமிக்க வகையில் அமைந்துள்ளது விடாமுயற்சியின் டீசர்.
மேலும் இயக்குனர் மகில் திருமேனி இதுவரை அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர்களில் மிகப்பெரிய நடிகர் என்றால் அது அஜித் தான். இதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின், அருண் விஜய் போன்ற நடிகர்களுடன் தான் பணியாற்றி இருக்கிறார் மகிழ்திருமேனி. அருண் விஜய் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்கும்பொழுது மிக பெரிய அளவில் பாராட்டு வகைகள் இயக்கியிருந்த மகிழ்த்திருமேனி.
அஜித் கிடைத்தால் சும்மாவா இருப்பார் அந்த வகையில் விடாமுயற்சி சத்தமே இல்லாமல் தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் வசூல் படைக்கும் என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்