நடிகர் அஜித் தன்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை நம்பி வந்தவர்கள், தனக்கு எதாவது நிகழ்ந்து விட்டால், அவர்கள் நடு ரோட்டில் நின்று விடக்கூடாது, என்பதற்காக, அஜித் செய்துள்ள செயல், உண்மையி்லே இவருக்கு கடவுள் மனசு தான், இவரை அவரது ரசிகர்கள் கடவுளே அஜித் என்று அழைப்பதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர், அஜித் செய்த இந்த செயலை பற்றி அறிந்தவர்கள்.
அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே, குட் பேட் அட்லீ என்கிற படத்தில் காமிட்டானர் அஜித்குமார். இரண்டு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டுமே திரைக்கு வர தயாராக இருக்கிறது, இதில் விடாமுயற்சி படம் முதலில் வெளியாக இருக்கிறது, அடுத்த இரண்டு மாதத்தில் குட் பேட் அட்லீ வெளியாக இருக்க இருக்கிறது, இந்நிலையில் அஜித் கார் ரேஸ் செல்ல இருப்பதாக கடந்த சில மதங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், இனி அஜித் கார் ரேஸ் செல்கிறார்.
அவர், இனி எப்ப திரும்பி வந்து, நடித்து கொண்டிருக்கும் படத்தில் மீண்டும் வந்து நடிக்க, அந்த படம் எப்ப ரிலீஸ் ஆக என விமர்சனம் எழுந்த நிலையில், அஜித் கார் ரேஸ் பக்கம் இருக்க வேண்டும், அல்லது சினிமா பக்கம் இருக்க வேண்டும், இரண்டு பக்கமும் இல்லாமல், அங்க ஒரு கால் வெச்சு இங்க ஒரு கால் வெச்சு, அவரை வைத்து படம் எடுப்பவர்களை படாத பாடு படுத்துகிறார் என அஜித் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
அப்படி விமர்சனம் செய்தவர்கள், இனி அஜித் போன்ற ஒரு மனிதன் பற்றி வாயே திறக்க முடியாதபடி அஜித் செய்த ஒரு சம்பவம் தற்பொழுது வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் விட முயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருந்த பொழுது கார் ரேஸுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார், அப்படி கார் ரேஸ் பயிற்சியில் அஜித் ஈடுபட்ட போது இரண்டு விபத்துகள் நடந்திருக்கிறது.
அந்த விபத்து குறித்த வீடியோவை இயக்குனர் மகில் திருமேனியிடம் நடிகர் அஜித்குமார் காண்பித்து இருக்கிறார், அந்த வீடியோவை பார்த்த மகிழ் திருமணிக்கு குலையே நடுங்கி விட்டது, என்ன சார் இவ்வளவு பெரிய அபாயகரமான விளையாட்டு அறிக்கை என்று மகிழ்த்திருமேனி அஜித்குமாரிடம் கேட்டிருக்கிறார், அப்போது அஜித்குமார் மகிழ் திருமேனியிடம் சொன்ன வார்த்தை தான் இப்படியும் இந்த உலகத்தில் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதாவது நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனியிடம் அந்த ஆக்சிடெண்ட் வீடியோவை காண்பித்து, நான் இந்த ரேஸில் பங்கேற்கும் போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் தான் நான் கமிட் செய்த படங்களை முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன், ஏனென்றால் என்னை நம்பி இரண்டு தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த குட் பேட் அட்லி, விடாமுயற்சி இந்த இரண்டு படத்தில் பல பேரின் உழைப்பு இருக்கிறது, அப்படி இருக்கையில் நான் ரேஸிற்கு செல் கலந்து கொள்ளும் போது 100% ஆக்சிலேட்டரை அழுத்தி மிதிக்க வேண்டும், என் கைவசம் இரண்டு படங்கள் உள்ளது என மனதில் நினைத்துக் கொண்டு, 90% மட்டுமே ஆக்ஸிடரை மிதித்து பாதுகாப்பாக ரேஸ் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தால் அது நான் கார் ரேஸில் நியாயம் சேர்க்கவில்லை என்பது தான் அர்த்தம் என தெரிவித்த அஜித் குமார்.
அதே நேரத்தில் நான் முழுமையாக கமிட் ஆன படங்களில் நடித்து முடிக்காமல் பாதியிலே விட்டு சென்றால், நான் சினிமாவிற்கு நியாயம் சேர்ப்பது போன்று இருக்காது என்று, தான் கார் ரேஸில் கலந்து கொள்ளும் போது தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் தனக்காக முதலீடு போட்டு படம் எடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் படத்தில் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தான் நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்திருக்கிறார் அஜித்.மேலும் இந்த கார் ரேஸ் முடியும் வரை வேறு எந்த ஒரு படத்திலும் கமிட்டாகி அட்வான்ஸ் தொகையை பெற மாட்டேன் என்பதையும் நடிகர் அஜித் உறுதியாக இருப்பது குறிப்படத்தக்கது.