அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் நான்கு நாட்களில் 100 கோடியை வசூலை பெற்று, 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து விட்டது என்கிற தகவல் வெளியானாலும் கூட, அஜித்தின் படத்திற்கு இந்த வசூல் மிகவும் குறைவானது. அஜித்தின் மற்ற படங்களுடன் ஒப்பிடும் பொழுது விடாமுயற்சி படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளது.
விடாமுயற்சி படம் வெளியாகி முதல் மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்குகள் பிசியாக இருந்து வந்த நிலையில், திங்கட்கிழமை தொடங்கி, விடாமுயற்சி படம் வெளியான திரையரங்குகள் காற்று வாங்க தொடங்கியது, இதனால் வசூல் மிக மோசமானது. இரண்டு வருடங்களுக்கும் பின்பு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் வெளியானதால் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் படம் மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/ajithkumar-vijay-1024x575.jpg)
விடாமுயற்சி படம் முதல் நாள் இப்படம் 26 கோடியை வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாள் 10.25 கோடியும், 3ம் நாள் 13.5 கோடியும், 4ம் நாள் 12.5 கோடியும், 5ம் நாள் 3.15 கோடியும் வசூல் செய்தது. அதேபோல், 6ம் நாளான நேற்றும் 3.15 கோடியே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் படம் வெளியாகி 6 நாட்களில் விடாமுயற்சி படம் 68.55 கோடியை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 68.55 கோடி வசூல் வசூல் என்பது இந்தியாவில் மட்டும் தான், மேலும், வெளிநாடுகளில் 35.2 கோடி வசூல் என பார்க்கும்போது உலகம் முழுவதும் சேர்த்து விடாமுயற்சி படம் 6 நாட்களில் 113.25 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது, அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் பட்ஜெட் எப்படியும் 200 கோடி இருக்கும் என்பதால் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என்கிறது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம்.
அதே நேரத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில், சந்திரமுகி, லால்சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என லைகா நிறுவனம் எடுத்த அனைத்து படங்களும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இதில், விடாமுயற்சி படத்திலேயே லைகா நிறுவனத்திற்கு 150 கோடி கஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், விடாமுயற்சி 150 கோடியை தாண்டுவதே கஷ்டம் தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் லைகா நிறுவனம் பெரிய நடிகர்களை வைத்து எடுத்த படமும் கை கொடுக்கவில்லை. சின்ன படமும் கைகொடுக்காத போது, லைகா நிறுவனம் அடுத்தடுத்து படம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் ஒரு படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் தற்பொழுது விடாமுயற்சி படத்தின் நஷ்டம் காரணமாக விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் அடைந்த தோல்வியின் காரணமாக, இனி பெரிய பட்ஜெட் படங்களை லைக்கா எடுக்க மாட்டார்கள், சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே எடுப்பார்கள் என கூறப்பட்டாலும், இனி சினிமா தயாரிப்பு தொழிலே வேண்டாம் என மூட்டை முடிச்சை கட்டிட்டு லண்டனுக்கு லைக்கா நிறுவனம் செல்ல இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், அஜித்தின் விடாமுயற்சி நஷ்டம் , விஜய் மகன் சஞ்சய் சினிமா கேரியருக்கு ஆப்பு வைத்து விட்டது என்கிறது சினிமா வட்டாரங்கள்..