தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர், ரஜினி போன்றவர்கள் கூட மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்தவர்கள், இதற்கு முக்கிய காரணம் எங்களை வாழ வைத்த மக்கள் தான் எங்களுக்கு தெய்வம் என்கிற உணர்வுடன் இருந்தார்கள்.ஆனால் நடிகர் அஜித் இவர் இந்த பூமியிலே பிறக்காமல் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்து வாழ்ந்தவர் போன்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக அஜித்தின் படத்தை பார்த்து இந்த அளவுக்கு அஜித் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக இருந்த மக்களும் அவருடைய ரசிகர்களையும் பார்த்தாலே ஒரு வெறுப்பு வருவது போன்று ஒரு தனி உலகத்தில் வாழுகின்றார் அஜித். ஆனால் இந்தியாவின் ஜனாதிபதி கூட அனைவருடனும் இணக்கமாக பழகுகிறார்கள், யாராவது சந்திக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு அப்பாயின்மென்ட் தருகிறார்கள்.
ஆனால் அஜித் வானத்தில் இருந்து குதித்தது போன்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார், அந்த வகையில் இதுவரை அஜித் கட்டி காப்பாற்றி வந்த இமேஜ் விஜயகாந்த் மரணத்தில் டோட்டல் டேமேஜ் ஆகி அவருடைய போலி முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு மக்களும் அவருடைய ரசிகர்களும் கழுவி கழுவி ஊத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் மரணத்திற்கு இந்தியாவின் பிரதமரே அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல், மேடையிலும் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேசியவர், மேலும் டெல்லியில் இருந்து இரண்டு பக்கத்திற்கு விஜயகாந்த் நினைவுகளை ஒரு கட்டுரையாகவும் வெளியிட்டு தன்னுடைய இரங்கலை பதிவு செய்கின்றார் பிரதமர் மோடி.
இந்தியாவின் பிரதமரே விஜயகாந்த் இரண்டு வரியில் இரங்கலும், மேடையில் பேசியும், பின்பு கட்டுரையும் வெளியிட்டு கௌரவப்படுத்தகையில், அஜித் அப்படி என்ன அவ்வளவு பிஸியாக இருக்கிறார், ஒரு இரண்டு வரியில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கா அஜித்துக்கு இதுவரை நாங்கள் அஜித் ரசிகராக வெட்கப்படுகிறோம் என்று அஜித் ரசிகர்களே தற்பொழுது அஜித்துக்கு எதிராக திரும்பி உள்ளார்கள்.
ஒரு இரண்டு வரியில் அஜித் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிப்பதால் அஜித் இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்கள் ஏதும் பறிபோகி விடுமா.? எதையும் கண்டு கொள்ளாமல் என்னா வேணா பேசிக் கொள்ளுங்கள் என் படத்தைப் பார்க்க என்னோட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற தெனாவட்டில் இதுவரை இருந்து வந்த அஜித் இனி அவருடைய ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்பது இனி அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் போது தெரியவரும்.
அந்த வகையில் எப்படி 2011 இல் விஜயகாந்தை விமர்சனம் செய்ததற்கு பின்பு வடிவேலு சினிமாவிலிருந்து அட்ரஸ் இல்லாமல் போனாரோ, அதே நிலைமைதான் விஜயகாந்துக்கு இரண்டு வரியில் இரங்கல் தெரிவிக்க கூட மனம் இல்லாத அஜித் இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகி உள்ளது. அஜித் எப்படி எனக்கு கூட்டமே பிடிக்காது என மக்களையும் ரசிகர்களையும் வெறுத்து ஒதுக்கி ஒரு தனி உலகில் வாழ்ந்து வருகிறாரோ.
அதேபோன்று இனி அஜித் நடிக்கும் படம் வெளியாகும் போது, அஜித்தை பின்பற்றி எங்களுக்கும் கூட்டமே பிடிக்காது அதனால் தியேட்டரில் அஜித் படத்தை கூட்டத்தோடு பார்க்காமல், எப்போது டிவியில் வருகிறதோ அப்போது குடும்பத்துடன் அதாவது அஜித் மாதிரி அவருடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தார் உடன் மட்டும் தனியாக இருப்பது போன்று அஜித் படத்தை மக்கள் தியேட்டரில் பார்ப்பதை புறக்கணித்து தமிழ் சினிமாவில் இருந்து அஜித்தை விரட்ட தயாராகி விட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தாத அஜித் மீது கடும் கோபத்தில் இருந்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..