நடிகர் அஜித் குமார் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்பு வெளியான வலிமை திரைப்படம் முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் வெளியானது. இதே போன்று வலிமை படத்தில் இடம் பெற்ற அம்மா பாடல் ஜெயலலிதா நினைவு தினம் அன்று வெளியிடப்பட்டது. முன்னால் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நடிகர் அஜித்குமார் அடிக்கடி குடும்பத்துடன் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்திப்பது வழக்கம்.
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அதிமுகவின் தலைமையை ஏற்று, முதல்வராக போகிறார் அஜித்குமார் என்கிற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த செய்தி உண்மையில்லை என்றாலும், ஆனால் அப்படி ஒரு செய்தி வெளிவரும் அளவுக்கு மறைந்த ஜெயலலிதா மீது மதிப்பு மரியாதையும் வைத்திருந்தார் அஜித் குமார், அதே போன்று ஜெயலலிதாவுக்கு அளவற்ற அன்பு அஜித் மீது இருந்தது.
திமுகவிடம் நெருக்கம் கட்டமாட்டர், கருணாநிதிக்கு நடத்த பாராட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி முன்பே, எங்களை கட்டாயப்படுத்தி சினிமா நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவதாக கர்ஜித்து அதிரடி காட்டியவர் அஜித், இந்நிலையில் சமீபத்தில் அஜித் நடித்த வலிமை படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில், இந்த படம் வெளியாக இரண்டு நாட்களுக்கு முன்பு மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றம் தெரிவித்ததாவது.
வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் அம்மா அவர்களின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படம் அம்மா பிறந்த நாளில் வெளிவர இருக்கின்றது. புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா? அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது.
படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்றும். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமி நாளில் படம் வெளிவருவது ஆச்சரியம் தானே! அஜித் அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வெளியிடப்படுகிறதா? என்பதற்கு படம் வந்த பிறகே விடை கிடைக்கும்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் எங்களின் திருநாளான தாயின் பிறந்தநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த வாழ்த்துக்கள் என ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்காலத்தில் என்ன வேண்டுமாலும் நடக்கலாம் என்றும், அரசிலுக்கு வரவே மாட்டேன் என சொன்ன கமல்ஹாசன் அரசிலுக்கு வந்தது போன்று நடிகர் அஜித் நடவடிக்கையில் பல மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.