எந்த நிலைக்கு சென்றாலும் வந்த நிலை மறவாதே என்கிற பழமொழிக்கு ஏற்ப, இன்று மிக பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் தனக்கு உதவியவர்களை மறக்காமல் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றவர், அந்த வகையில் அணைத்து இடங்களிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் பாலசந்தர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவரை பெருமை அடைய செய்வதை தொடர்ந்து செய்து வருகிறார் ரஜினிகாந்த்.
ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் மிக பெரிய உச்சத்துக்கு வந்ததும், மாஸ் படங்களில் மட்டும் நடித்து வந்த ரஜினிகாந்த், மாஸ் பட கதையை மட்டும் தேர்வு செய்து அதற்கேற்ற இயக்குனர்களுடம் மட்டும் வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்ட போது. இனி பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. அப்போதும் கூட இயக்குனர் பாலச்சந்தருக்கு உதவும் நோக்கில் பாலசந்தர் தயாரிப்பில் அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்து பொருளாதார ரீதியில் உதவி செய்து வந்தார் ரஜினிகாந்த்.
ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருக்கக்கூடிய விஜய், அஜித் இருவரும் தங்கள் வந்த பாதையை மறந்து, தங்களை இந்த உயரம் அடைய படிக்கட்டுகளாக இருந்தவர்கள், அஜித் , விஜய் இருவரையும் சந்திக்க கூட முடியாதவாறு இவர்கள் நடந்து கொள்வது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது அவருடைய தந்தையாக இருந்தாலும் கூட,
சினிமாவில் நடிகர் விஜய்க்கு முதல் முதலில் அவரை அடையாளம் காட்டிய படம் பூவே உனக்காக, இந்த படத்தின் இயக்குனர் விக்ரமன் பல வெற்றி படங்களை கொடுத்தவர், இவர் நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க வேண்டும் என விரும்பியவர், உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது, படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விஜய் இந்த படத்தில் இருந்து விலக பின்பு சூர்யா நடித்தார்.
இதே போன்று ஆசை படத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைத்து அடையாளம் காட்டியவர் இயக்குனர் வசந்த். காதல் கோட்டை படத்தில் ஒரு நட்சத்திர நடிகராக அஜித் ஜொலிக்க காரணமாக இருந்தவர் அந்த படத்தின் இயக்குனர் விக்ரமன், ஆனால் இப்படி ஆரம்ப கட்டத்தில் விஜய், அஜித் இருவரையும் படிக்கட்டுகளாக இருந்து ஏற்றிவிட்ட விக்ரமன் , வசந்த் போன்ற இயக்குனர்கள் மீண்டும் படம் இயக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் நிலையில்,
அவர்கள், விஜய் மற்றும் அஜித் ஆகியோரை சந்திக்க முடியாத தூரத்தில் இருவரும் இருந்து வருகின்றனர், மேலும் அவர்கள் படைப்புகள் இந்த கால கட்டத்துக்கு ஏற்றார் போன்று இல்லை என்றால் கூட, கதையை மட்டும் அவர்களிடம் வாங்கி கொண்டு வேறு ஒரு இயக்குனரை வைத்து தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றார் போன்று படம் இயக்கி, கதைக்கான சம்பளம் மற்றும் அங்கீகாரத்தை அவர்களுக்கு கொடுக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.
What rajini done to society we know vijay and ajith done lot to tamil cinema and people of tamil nadu especially vijay so you stop sangi talks
Comments are closed.