சமீப காலமாகவே அஜித்தின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். அப்படி அஜித் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். நீண்ட கால இழுபறிக்கு பிறகு, தொடங்கப்பட்ட விடாமுயற்சியின் சூட்டிங் ஏற்கனவே அஜர்பைஜானில் நடத்தப்பட்டது .திடீரென அசர்பைஜானில் சூட்டிங் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால், சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர்.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு, 15 நாட்கள் அஜித், அர்ஜூன் காம்பினேஷனில் கார் சேஸிங் காட்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மீண்டும் படக்குழுவினர் கேப் விட்டனர். இந்நிலையில் லண்டனில் புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு தற்போது மீண்டும் அஜித் அசர்பைஜான் திரும்பியுள்ளார்.
இவ்வாறு சூட்டிங் மற்றும் குடும்பத்துடன் கொண்டாட்டம் என அஜித் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விஜயகாந்த் மரணம் அடைந்த அன்றே கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, கடும் சிரமத்துக்கு மத்தியில் விஜய்காந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற விஜயின் இந்த செயல் மனதை உருக வைத்தது. ஆனால் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவரான அஜித் கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.
அஜித் ஷூட்டிங்ல் பிசியாக இருப்பதால் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என அஜித் தரப்பில் கிளப்பி விட்டாலும், அதெல்லாம் உண்மையில்லை, நடிகர் அஜித் அதர்பைஜானில் ஷூட்டிங் முடித்த பிறகு வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் என ஜாலியாக நாட்களை கழித்து வந்தது தெரிவந்துள்ளது.
இதில் உச்சகட்டமாக கேப்டன் மறைவின் காரணமாக தமிழகமே சோகத்தில் இருக்க, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு பெண்ணின் கையைப் பிடித்து அஜித் நடனமாடும் வீடியோ வெளியாகி வசமாக சிக்கினார் அஜித். இதனால் மக்கள் அஜித்தை கழுவி கழுவி ஊத்தினார்கள், மேலும் விஜயகாந்த் மரணத்திற்கு இரண்டு வரியில் ஒரு அறிக்கை கூட வெளியிடாத அஜித், வெளிநாட்டில் செம்ம அஜால் குஜாலாக அஜித் வருவதை வீடியோ எடுத்த ரசிகர் ஒருவர் மொபைலை வாங்கி அதில் இருந்த வீடியோவை அஜித் டெலிட் செய்ததை மற்றொருவர் எடுத்த வீடியோ வைரலாகி, மேலும் அஜித்தின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது.
இந்நிலையில் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள அஜித், விஜயகாந்த் சம்மதிக்கும் செல்லவில்லை, அவரது குடுமப்த்தினரையும் சந்திக்கவில்லை, மீண்டும் படப்பிடிப்புக்காக துபாய் திரும்பியுள்ளார். இந்நிலையில் தகேப்டனுக்கு நடிகர் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. இதிலும் அஜித் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படும் நிலையில், அஜித் ரசிகர்களையும் மதிப்பதில்லை சக நடிகர்களையும் மதிப்பதில்லை ,அந்த வகையில் அஜித் திருந்துவதற்கான வாய்ப்பு இல்லை, ஆனால் அஜித்தை தலையில் தூக்கி கொண்டாடும் ரசிகர்களாக இருக்க கூடியவர்கள் திருந்தினால் மட்டுமே அஜித்தின் தலைக்கனம் குறையும் என விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.