துபாயில் செட்டிலாகும் அஜித்… நடிகரின் இருந்து தொழில் அதிபராக அவதாரம் எடுக்கும் அஜித்…

0
Follow on Google News

கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமாருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது ரசிகர்களால் AK என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் வெகு விரைவில் துபாயில் செட்டில் ஆகப் போவதாகவும், அங்கேயே பிசினஸ் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடாமுயற்சி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் பொருளாதார ரீதியான சிக்கலில் இருந்ததால் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வரும் 4ம் தேதி அஜர்பைஜானில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.
அஜர்பைஜான் மட்டுமில்லாமல் துபாயிலும் பாலைவனத்தில் படத்தின் முக்கியமான ஃபைட் சீனை எடுக்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.

இவ்வாறு வெவ்வேறு கதைக்களத்தைத் தேர்வு செய்து கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்துக்கு பைக் என்றால் அலாதிப் பிரியம். ஆம், நடிகர் அஜித்துக்கு பைக் ஓட்டுவது என்பது ரொம்பவேப் பிடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பைக் ரைடரான நடிகர் அஜித்தின் வாழ்நாள் இலட்சியங்களில் பைக்கிலேயே உலகைச் சுற்றி வருவதும் ஒன்றாகும்.

அதனால்தான், ஷூட்டிங் இல்லாத காலத்தில் பைக்கை எடுத்துக் கொண்டு தேசம்தேசமாக டூர் அடித்து வருகிறார். ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் வாழ்நாள் கனவு என இரண்டையுமே சரியாக பேலன்ஸ் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நிறைய பிஸினசும் நடத்தி வருகிறார் என்பது அவ்வளவாக செய்திகளில் வெளியானதில்லை. சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவற்றை வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்தால்தானே, பணம் இரட்டிப்பாகும்.

இவ்வாறு நடிகர் அஜித் மட்டுமல்ல சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவரும் சைடு பிசினஸ் செய்வது வழக்கம் தான். அப்படி இருக்கையில், இப்போது நடிகர் அஜித் துபாயில் பிசினஸ் செய்யப் போவதாகவும், அங்கு பிரம்மாண்டமான சொகுசு வில்லா வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், துபாயில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதால், நடிகர் அஜித் தான் வாங்கியுள்ள சொந்த வீட்டிலிருந்து ஷூட்டிங்கில் பங்கேற்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அங்கேயே தனது அலுவலகத்தையும் அஜித் அமைத்துவிட்டதாகக் கூறிய பிரபல பத்திரிகையாளர் வலைபேச்சு ஆனந்தன், இவையனைத்தும் நடிகர் அஜித் துபாயில் செட்டில் ஆவதற்கான நடவடிக்கைகள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலகியுள்ள நிலையில் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும், விடாமுயற்சி படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டபடி நடக்கும் சூழலில் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதே நேரத்தில்தான் விஜய்யின் தளபதி 68 படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் விஜய் -அஜித் படங்கள் மோதுமா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. எவ்வாறாயினும், ரசிகர்களுக்கிடையேயான விவாதம் வழக்கம் போல சூடு பிடிக்கத் தான் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.