ஆள விடுங்கப்பா.. பைக்கில் வேர்ல்ட் டூர் கிளப்பிய அஜித்… அப்ப மகிழ்திருமேனி படம் என்னாச்சு.?

0
Follow on Google News

நடிகர் அஜித் சினிமாவை விட அதிகம் நேசிப்பது பைக் பயணத்தை, இதற்கு முன்பு லண்டன், திபெத் போன்ற நாடுகளுக்கு பைக் மூலம் உலக டூர் சென்று வந்த அஜித், சுமார் ஒன்றரை வருடம் பைக்கில் உலகில் பல இடங்களுக்கு சுற்றி வரவேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே துணிவு படத்தின் படப்பிடிப்பின் இடையில் பைக் டூர் சென்ற அஜித், அந்த பயணத்தை முடித்து மீண்டும் துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் துணி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது அஜித் தன்னுடைய உலக டூர் பற்றி ஒரு திட்டமிடல் வைத்திருந்தார். அதில் அடுத்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் 62 ஆவது படத்தை முடித்துவிட்டு சினிமாவுக்கு சிறிய இடைவேளை விட்டு தன்னுடைய ஒன்றரை வருடம் பைக் பயணத்தை தொடரவேண்டும் என திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்த ஒன்றரை வருட பைக் டூரை தொடர்ந்து செய்யாமல், இடையில் அடுத்தடுத்து படப்பிடிபில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் நடிக்கும் படம் பல்வேறு பிரச்சனைகளால் அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு மகிழ் திருமேனி கமிட்டாகி உள்ளார்.இதனால் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடை பெறவில்லை.

மேலும் மகிழ் திருமேனி தற்பொழுது வரை ஸ்கிரிப்ட் எதுவும் பணியை முடிக்கவில்லை. மேலும் இந்த படத்தை தொடங்குவதற்கு லைக்கா நிறுவனமும் தாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில் தான் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த பைக் டூரை தற்பொழுது தொடங்கியுள்ளார் நடிகர் அஜித்.

நீங்கள் ஸ்கிரிப்ட் எழுதி தயார் செய்யுங்கள் அதற்குள் நான் ஒரு டூர் சென்று விடுகிறேன் என தீபத் பகுதிகளில் தற்பொழுது பைக் பயணத்தை மேற்கொண்டுள்ள அஜித் இந்த மாதம் இறுதியில் சென்னை வருவதாகவும் மே மாதம் மகிழ்திருமேனி இயக்கத்தில் தொடங்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.