பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று யார் கண்டா என்கிற பழமொழிக்கு ஏற்ப, அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என ஒரு காலத்தில், அஜித் நடித்த படத்தில் காமெடியனாக நடித்த சூரி இன்று அஜித்துக்கே சவாலாக உருவெடுத்துள்ளது, என்னடா இது அஜித்துக்கு வந்த சோதனை என்கிற சூழல் உருவாகி உள்ளது.
அஜித் நடித்த விடாமுயற்சி படம், திரைக்கதையில் பெரிதாக எந்த சுவாரசியமும் இல்லை, மேலும் அஜித்தை திரையில் பார்த்தாலே போதும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமே , அதாவது அஜித் நடிக்கும் படத்தில் கதை, திரைக்கதை என எதுவுமே சரியில்லை என்றாலும் கூட, அஜித் திரையில் மாஸாக வந்தாலே போதும் என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கும், அப்படி எந்த ஒரு மாஸ் சீனும் விடாமுயற்சி படத்தில் இல்லை என்பது ஏமாற்றமே.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/actor-ajith-soori-1024x575.jpg)
அந்த வகையில் இரண்டு வருடம் பல்வேறு இடையூறுகளை கடந்து திரைக்கு வந்த விடாமுயற்சி பெரிதாக சோபிக்க வில்லை. அதாவது அஜித் படத்திற்கு இந்த நிலைமையா? என சொல்லும் வகையில் நாளுக்கு நாள் விடாமுயற்சி படத்தின் வசூல் பலத்த அடி வாங்கி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்திற்காக எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இல்லாததால் வசூல் மிக பெரிய அளவில் குறைந்து வருகிறது.
விடாமுயற்சி படத்தின் நான்காம் நாள் வசூலில் நிலவரம் வெளியாகியுள்ளது, அதில் உலகம் முழுவதும் வெறும் 120 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது விடாமுயற்சி படம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் மொத்த பட்ஜெட் அஜித் சம்பளம் உட்பட, மொத்தம் 220 கோடி என தெரிவிக்கப்பட்ட நிலையில் , இந்த படம் செலவு செய்யப்பட்ட 220 கோடி வசூலை கூட எட்டுமா.? என்கிற சந்தேகம் நிலவி வருகிறது.
மேலும் இணையத்தில் டிக்கெட் புக்கிங்க் மிக மந்தமாக இருக்கிறது, பல திரையரங்குகளில் காலி இருக்கைகள் மத்தியில் விடாமுயற்சி படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படத்தில், முதல் வாரம் டிக்கெட் புக்கிங் நிலவரத்தில் கடைசி இடத்தை பிடித்துள்ளது விடாமுயற்சி படம்.
இந்நிலையில் முதல் வார டிக்கெட் புக்கிங் வரிசையில், அமரன் முதல் 206 கோடி வசூல் செய்து முதல் இடத்திலும், 190 கோடி வசூல் செய்து கோட் படம் இரண்டாவது இடத்திலும், மத கஜ ராஜா 126 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், மற்றும் அடுத்தடுத்து வரிசையில், அயலான், கேப்டன் மில்லர், ராயன், வேட்டையன், அரண்மனை 4 , சூரி நடிப்பில் வெளியான கருடன் அடுத்து விடாமுயற்சி படங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளி சூரி நடித்த கருடன் படம் முதல் வார டிக்கெட் புக்கிங் 43 கோடி வசூல் செய்துள்ளதாகவும், ஆனால், அஜித் நடித்த விடாமுயற்சி படம் வெறும் 40 கோடி மட்டுமே டிக்கெட் புக்கிங்் ஆகியுள்ளதால், நடிகர் அஜித்தை பின்னுக்கு தள்ளியுள்ளார் சூரி என்றும், என்னடா இது சூரிக்கு வந்த சோதனை என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.