அதேபோன்று அஜித் ஆரம்பக்கட்டில் சினிமாக்களை தொடர்ந்து தயாரித்து வந்தவர் நீக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இவர் மொத்தம் இது வரை தயாரித்த 14 படங்களில் 9 படம் அஜித் நடித்த படங்கள். அஜித் நடித்த ராசி படத்தை தயாரித்ததின் மூலம் அஜித்துக்கு அறிமுகமான சக்கரவர்த்தி அஜித்துடன் நெருங்கி பழகி வந்தார். ராசி படம் தான் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படமும் கூட.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பை தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் அஜித் நடிக்க முடிவு செய்தார். அந்த வகையில் ராசி படத்தை தொடர்ந்து, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் என தொடர்ந்து ஹிட் படங்களில் நிக்க்ட்ஸ் தயாரிப்பில் நடித்து வந்தார் அஜித். தொடர்ந்து அஜித் நடிப்பில் வெற்றி படங்களை தயாரித்து பெரும் லாபத்தை சம்பாரித்து வந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் அஜித் நடித்த ஜி மற்றும் ஆஞ்சநேயா ஆகிய படங்கள் தோல்வியை தழுவி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது.
இந்நிலையில் மிக பெரிய நஷ்டதை சந்தித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியை தூக்கி விட வேண்டும் என்கின்ற நோக்கில் மீண்டும் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வரலாறு படத்தில் நடித்து சக்கரவர்த்தியை தூக்கி விட்டவர் அஜித்.இதன் பின்பு ஒரு சில படங்களை மட்டும் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அதன் பின்பு படம் தயாரிப்பதை கைவிட்டு விட்டார்.
இந்த நிலையில் தற்பொழுது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி புற்று நோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நம்பிக்கைக்குரிய நபராக ஒரு காலத்தில் திகழ்ந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தற்பொழுது புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டு நிலையில், அவர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து மீண்டு வருவதற்கு அஜித் நிச்சயம் துணை இருப்பார் என்கிறது செய்தி வெளியானது.
ஆனால் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியே என்னத்த சிகிச்சை எடுப்பது என தன்னுடைய உடல் நிலை குறித்து பெரிதாக பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் புற்று நோய் பாதிப்பு காரணமாக நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவுக்கு அஜித் வருவார் என பலரும் எதிர்பார்க்க தற்பொழுது நேபாளில் பைக் பயணத்தில் இருப்பதாகவும், மே 8ம் தேதி தான் சென்னை வருவதாகவும் கூறப்படுகிறது.