அஜித் நடிக்க இருக்கும் விட முயற்சி படம் என்னாச்சு என உறுதியான எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் அஜித் தற்பொழுது புதியதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரிக்கும் முடிவில் இருப்பதாகவும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அஜித் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க போவதில்லை, சிறிய பட்ஜெட்டில் டாகுமெண்டரி படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.
தமிழகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாமைச் சேர்ந்த வளர்ப்பு யானையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம், ஆஸ்கர் விருதை வென்றது, இதன் பின்பு தான் அஜித்துக்கு டாக்குமெண்டரி படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை மனதில் தோன்றியுள்ளது. இந்தியாவில் உள்ள பல திறமையான நபர்களை உலக அறிய செய்யவேண்டும் என்கிற முயற்சியில் தான் அஜித் டாக்குமென்டரி படம் எடுக்கும் ஆசை அவருக்கு வந்துள்ளது.
அஜித் சில வருடங்களுக்கு முன்பு ஏகே புரடக்சன் என்கிற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சில படங்கள் தயாரித்து, பின்பு தயாரிப்பு தொழிலை கைவிட்டவர், பொதுவாக அஜித் அவர் நடிக்கும் படங்கள் சிக்கனமாக சிறிய பட்ஜெட்டில் தயாரிப்பாளருக்கு சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் தான் இருப்பார். பெரிய பட்ஜெட் படங்களை அதிகம் விரும்ப மாட்டார் அஜித்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஆரம்ப கட்டத்தில் சத்தமே இல்லாமல் தயாரிப்பு தொழிலை தொடங்குவதற்கு முன்பு ஆர்.டி ராஜா உடன் சென்று ஒரு முறை அஜித்தை பார்த்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் ஆர்.டி ராஜாவை நம்பி தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரிக்கவே முன் வந்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் ஆர்.டி ராஜா உடன் சிவகார்த்திகேயன் அஜித்தை சந்தித்த போது.
சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டியுள்ளார் அஜித், நல்ல நடிக்கிறீர்கள், உங்கள் படம் எல்லாம் சூப்பராக இருக்கிறது, இப்படியே மெயின்டைன் பண்ணுக என பாராட்டியுள்ளார் அஜித்.ஆனால் அப்போது ஆர்.டி ராஜா உடன் இணைந்து சொந்தமாக படம் தயாரித்து வருவதை அஜித்திடம் நேரடியாக தெரிவிக்காமல், எதிர்காலத்தில் படம் தயாரிக்கும் முடிவில் இருப்பதாக தன்னுடைய விருப்பத்தை அஜித்திடம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
உடனே அஜித், அய்ய்யோ இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள், சினிமாவில் இருக்கும் பலர் திருடர்கள், உங்களை எளிதாக ஏமாற்றி விடுவார்கள். அதனால் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருங்கள். நல்ல சம்பாதிங்க, வேற ஒரு தொழிலில் முதலீடு செய்து முன்னேறுங்கள், தேவையில்லாமல் தயாரிப்பாளராக வேண்டும் என்கின்ற எண்ணத்தை கைவிட்டுடுங்கள்.
படம் தயாரிக்க தொடங்கினால்,மிகப் பெரிய சிரமத்தை சந்திக்க நேரிடும், நடிப்பு தொழிலை மட்டும் பாருங்கள் என சிவகார்த்திகேயனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் நடிகர் அஜித். இருந்தும் அடுத்தடுத்து ஆர்.டி ராஜாஉடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி சிவகார்த்திகேயன் கடனாளியாக தற்பொழுது வரை தத்தளித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் ஆரம்பத்திலே ஆர்.டி ராஜா பக்கத்தில் இருக்கும் போதே எல்லாம் திருட்டு பயலுக உங்களுக்கு தயாரிப்பு தொழில் வேண்டாம் என அஜித் எச்சரித்து இருந்தார், ஆனால் அதையும் மீறி தான் சிவகார்த்திகேயன், ஆர்.டி ராஜா உடன் இணைந்து படம் தயாரித்து, மிக பெரிய நஷ்டத்தை சந்திக்க காரணமாக இருந்தது ஆர்.டி ராஜா தான் என கூறப்படும் நிலையில், இன்றும் கடனாளியாக தத்தளித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் படம் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது கடன்காரர்கள் கொடுக்கும் குடைச்சல், நிச்சயம் அஜித் ஆரம்ப கட்டத்திலே எச்சரித்து அட்வைஸ் நினைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.