மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இடைவிடாது பெய்ந்து வந்த மழையினால், தண்ணீரில் சென்னை தத்தளித்து வந்தது, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் பெய்ந்துள்ள மழையின் காரணமாக சென்னை எப்படி தப்பிக்க போகிறத என்கிற அச்சம் ஒரு பக்கம் இருக்க, இந்த மீட்பு பணியை எப்படி செய்ய போகிறது ஆளும் அரசு என்கிற சவாலும் இருந்து வந்தது.மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கி இருந்த மக்களை மீட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக மக்கள் தாக்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சினிமா துறையை சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் யாரையும் நிவாரண பணிகளில் ஈடுபடுவதை பார்க்க முடியவில்லை, தொலைக்காட்சி நடிகர்களான கலக்கப்போவது பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்தனர், விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களம் காண இருக்கும் நடிகர் விஜய், சமூக வலைதளத்தில் அவருடைய மக்கள் இயக்க நிர்வாகிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என உத்தரவு போட்டுவிட்டு, கம்முனு சும்மா ஜம்முனு வெளியில் தலையே காட்ட வில்லை.
இதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் புகைப்படத்தை கையில் ஏந்தி கொண்டு, விஜய் ரசிகர்கள் சோறு போட்ட காட்சி, இதுலையும் கூட நாங்க தான் சோறு போட்டோம் என்று தெரிவதற்காக விளம்பரம் செய்வதா, என கடும் விமர்சனம் எழுந்தது, மேலும் குப்பை மேல் இருக்கும் குப்பையை அள்ளி குப்பையை போட்டு விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்த அட்ராசிட்டி கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானது.
நடிகர் விஜய் தரப்பு ஒரு பக்கம் வெள்ள நிவாரண பனி என்கிற பெயரில் விளம்பரம் தேடும் முயற்சியில் ஜோக் காட்டி கொண்டிருக்க, மறுபக்கம் நடிகர் சூரி, விஷ்ணு விஷால் போன்ற நடிகர்கள் முதல்வர் நிவாரண பணிக்காக நிதிகள் வழங்கி வந்தது பாராட்டும் படியாக இருந்தது, நடிகர் விஷால் எதுவுமே செய்யாமல் அரசையும், மாநகராட்சியையும் குறை சொல்லி வாயிலே வடை சுட்ட காட்சியும் அரங்கேறியது.
அதே போன்று நடிகை நயன்தாரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய கம்பெனி வாகனத்தில் நயன்தார புகைப்படத்துடன் கூடிய கம்பெனி பெயருடன் நிவாரண பொருட்கள் வழங்கி தன்னுடைய கம்பெனியை விளம்பரப்படுத்தியது மட்டுமில்லாமல், நிவாரணம் பெற்ற மக்கள் நயன்தாராவுக்கு நன்றி சொல்லுபடி பேச வைத்து அந்த வீடியோவை வெளியிட்டு விளம்பரம் தேடி கொண்டார் நயன்தாரா என்கிற விமர்சனமும் எழுந்தது.
இப்படி வெள்ளத்தால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் அஜித் எங்கே போனார், ஒரு படத்துக்கு எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார். என பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், சத்தமே இல்லாமல் உதவிகளை செய்துள்ளார் அஜித், சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களை உதவி செய்யுங்க என உசுப்பேத்திவிட்டு விஜய் மாதிரி கம்முனு சும்மா ஜம்முனு இல்லாமல், நேரடியாக உதவி செய்துள்ளார் அஜித்.
புயல் வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்ட சமயத்தில், தன்னுடைய வீட்டை திறந்து விட்டு அதில் 100 பேரை தங்க வைத்துள்ளார் அஜித், சுமார் மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேலையும் வித விதமாக சாப்பாடுகள் வழங்கவும் அஜித் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் வெள்ள நீர் வடிந்து, அஜித் வீட்டில் தங்கியிருந்த மக்கள் திரும்பி செல்லும் போது, ஒவொருவருக்கும் தலா பத்தாயிரத்தை கையில் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் அஜித்.
அஜித் செய்த இந்த செயலை சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், விளம்பரத்திற்காக விஜய் புகைப்படத்தை கையில் ஏந்தி மக்களுக்கு சோறு போட்ட விஜய் தரப்பு எங்க, சத்தமே இல்லாமல் மக்களுக்கு உதவி செய்த அஜித் எங்க. என அஜித்தை பாராட்டி வருகிறார்கள் மக்கள்.